Thursday, April 10, 2014

மார்கண்டேய புராணம்

மார்கண்டேய புராணம்:

வியாசரின் சிஷ்யர்களுள் ஒரு ரிஷி ஜைமினி. இவரின் வேதம் சாமம். இவர் மார்கண்டேயரை அடைந்து தர்மபக்ஷிகள் மூலமாக உபதேசம் பெற்றவர். இந்த தர்மபக்ஷிகள் கூறிய உபதேசமே மார்கண்டேய புராணம்.

வியாசருடைய சீடர் ஜைமினி பகவான் முன்பிறவியில் பிராமண குலத்தில் பிறந்து ஞானம் பெற்று மிகுந்த சாமர்த்தியசாலியாய் இருந்தவர்.
இவர் இரண்டு பறவைகளை நோக்கி, கீழ்கண்ட கேள்விகளைக் கேட்டார்.

1) 'விஷ்ணு, மானுட உடம்பை எடுத்ததற்கு காரணம் என்ன?' என்றும்

2) 'தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்னும் பஞ்சபாண்டவர் ஐவருக்கும் பொதுவாக திரௌபதி என்னும் ஒருத்தியே மனைவியாக ஆனதற்கு காரணம் என்ன?' என்றும்,

3) பலராமர், மதுமயக்கத்தினால் தாம் செய்துகொண்ட பிரமஹத்தி பாவத்தை போக்கும் பொருட்டு இவர் பிராயசித்தம் செய்து கொண்டது எதற்கு? என்றும்,

4) திரௌபதியுடைய புதல்வர் ஐவருக்கும் காக்கும் தலைவராக இருந்துவந்த கிருஷ்ணன், அர்ச்சுனன் இருவருக்கும் அகாலமரணம் எய்துவதற்கு காரணம் யாது? என்றும்,

நான்கு கேள்விகளைக் கேட்டார்.

இதற்கு விடைசொல்லும் விபரங்களே இந்த மார்கண்டேய புராணம். இது 32,000 கிரந்தங்களை உடையது. இதற்கு மார்கண்டேய புரோக்தம் என்றும் பெயர்.

தர்ம பக்ஷிகள்:
பிங்காஷன், விபோதன், சுபுத்திரன், சுமுகி, என்னும் நான்கு பக்ஷிகள் (பறவைகள்). பூர்வத்தில், விபுலன் என்னும் முனிவருக்கு சுகுருசன், தும்புரன் என்னும் இருவர் புத்திரர் பிறந்தார்கள்.


இந்திரன் பக்ஷி (பறவை) உருவம் எடுத்து சுகுருசனிடம் சென்று நரமாமிசம் கொடு என்று கேட்டான். சுகுருசன் தன் மகன் நால்வரையும் நோக்கி உங்களில் ஒருவன் இவருக்கு இரையாகுக என்றான். அதற்கு ஒருவரும் உடன்படவில்லை. அதனால் கோபம் கொண்டு அந்த நால்வரையும் பக்ஷிகள் (பறவைகள்) ஆகுக என்று சபித்தார். அது காரணமாக பக்ஷிகளாகி ஜைமினி முனிவருக்கு அவரின் சந்தேகத்தை தீர்த்து சாப நிவர்த்தி பெற்றனர். (இது மார்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுள்ளது).


No comments:

Post a Comment