சுக்கிரன்:
பிரம மானச
புத்திரர்களுள் ஒருவர். பிருகுவின் பௌத்திரன். இவர் அசுரர்களின் குரு. இவரின் மகள்
தெய்வயானை. இவரின் தாய் தேவ லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்தபோது விஷ்ணுவால்
கொல்லப்பட்டாள். இவர் அசுரர்களின் மந்திரி எனவும் சொல்லப்படுபவர்.
இவர் மகாபலி
சக்கரவர்த்தியிடம் மந்திரியாக இருந்தபோது, விஷ்ணு
வாமனனாக அவதாரம் செய்து மகாபலியிடம் மூன்று அடி மண் வேண்டும் என கேட்டபோது,
இந்த சுக்கிரன், 'இது விஷ்ணுவின் வஞ்சகம்,
நீ நம்பாதே' என்று மன்னனுக்கு சொல்லிக்
கொடுத்ததால், விஷ்ணு, இந்த சுக்கிரனின்
ஒரு கண்ணை எடுத்துவிட்டான்.
சுக்கிரன், இறந்த உயிரை
எழுப்பும் வல்லமை உடையவன். இந்த சுக்கிரன் இருக்கும் மண்டலம் அப்பு மண்டலம்.
சுக்கிரன் மழைக்கு அதிபதி. சுக்கிரன் ஜாதகத்தில் நல்ல ஸ்தானங்களில் இருந்தால் ராஜயோகம்
உண்டு.
No comments:
Post a Comment