பஞ்சீகரணம்:
ஐம்பூதங்களில், ஒவ்வொரு பூதமும் இருகூறாக ஆகி, அதில் ஒரு கூறை நிறுத்திக் கொண்டு, மற்றொரு கூறை
நான்கு கூறுகள் ஆக்கி, அந்த நான்கும் மற்ற நான்கு
பூதங்களுக்கு கொடுத்தும் வாங்கியும் தம்மில் கலப்பது பஞ்சீகரணம் எனப்படும்.
ஆகாயம் துவாரமாகி
மற்ற பூதங்களுக்கு இடம் கொடுக்கும் இயல்பானது. வாயு சலித்து மற்ற பூதங்களை
திரட்டும் இயல்பானது. தேயு சுட்டு ஒன்றாக்கும் இயல்பானது. அப்பு குளிர்வித்து பதம்
செய்யும் இயல்பானது. பிருதிவி கடினமாய் ஆக்கும் இயல்பானது.
ஆகாயம்
வட்டவடிவம்;
வாயு அறுகோணம்;
தேயு முக்கோணம்;
அப்பு பிறை
வடிவம்;
பிருதிவி சதுரம்;
ஹ-ய-ர-வ-ல என
ஆகாயம் முதல் ஐந்து பூதங்களுக்கும் முறையே இது அக்ஷரமாகும்.
No comments:
Post a Comment