திரௌபதி
துருபதன் மகள்.
பாண்டவர் மனைவி
பூர்வஜென்மத்தில்
நளாயனன் என்னும் ரிஷியின் மகள். இவளுக்கு இந்திரசேனை என்னும் பெயர். இவளை
மௌத்கல்லியன் என்னும் ரிஷிக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
அவள் கணவனோ, இவளின் பதிவிரதை தன்மையை சோதிக்க விரும்பி, தானே குஷ்டரோகி ஆகிக் கொண்டான். ஆனாலும் அவளோ எந்தவித வெறுப்பும்
காட்டாமல் அவனுடைய தேகத்தை தொட்டு மருந்து போட்டு கவனித்து வந்தாள்.
அவளின்
பணிவிடையைக் கண்டு மகிழ்ந்த கணவன், அவளிடம்,
'உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டான். நீர்
மிக அழகான வாலிபனாக ஆகி என்னுடன் ஐந்துமுறை கலக்க வேண்டும் என்று கேட்டாள்.
அவ்வாறே அவனும் செய்தான். அவன் சிறு காலத்தில் இறந்துவிட்டான். அவளும் இறந்து விட்டாள்.
இவள், மறு ஜென்மத்தில், காரொசனுக்கு மகளாகப்
பிறந்து பசுபதியை நோக்கித் தவம் இருந்தாள். பசுபதி இவள் முன் தோன்றி 'உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டார்.
முன்பிறவியில் கணவனின் ஏக்கத்தில் இருந்தவள், 'எனக்கு கணவர்
வேண்டும்' என்று கேட்டாள். அதை 'பதிந்தேகி,
பதிந்தேகி' என்று ஐந்து முறை கேட்டாள். பதி
வேண்டும் என்று அர்த்தம். பசுபதியும் அவ்வாறே வரம் அருளினார்.
மறு ஜென்மத்தில்
இவள் ஐந்து கணவனைப் பெற்றாள்.
இவள் யாகத்தில்
பிறந்ததாள் யாக்கியசேனை என்றும், துருபதன் மகள்
என்பதால் திரௌபதி என்றும், பாஞ்சால ராஜன் மகள் என்பதால்
பாஞ்சாலி என்றும் பல பெயர்களைப் பெறுவாள். ஆனால் அவளின் தந்தை இட்ட பெயர் 'கிருஷ்னை'.
திரௌபதி
யுதிஷ்டிரனுக்கு பெற்ற மகன் பிரதிவிந்தியன்.
வீமனுக்குப்
பெற்ற மகன் சுருதசேனன்,
அர்ச்சுன்னுக்கு
பெற்ற மகன் சுருதகீர்த்தி.
நகுலனுக்குப்
பெற்ற மகன் சதானீகன்.
சகாதேவனுக்குப்
பெற்ற மகன் சுருதகன்மன்.
No comments:
Post a Comment