Saturday, March 26, 2016

இராமன்--சீதையின் விமானப் பயணம்


இராமன்--சீதையின் விமானப் பயணம்

புஷ்பக விமானத்தில் அமர்ந்து இராமனும், சீதையும், மற்றவர்களும் இலங்கையிலிருந்து அயோத்திக்கு வருகிறார்கள்;

இராமன், தன் மனைவி சீதைக்கு, வழியில் காணும் சிறப்புகளை எல்லாம் காட்டி ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வருகிறார்;

"சீதையே! சமுத்திரத்திலே திமிங்கிலங்கள் துள்ளி விளையாடுவதைப் பார்!  கடற்கரையில் தோன்றும் கமுகம் சோலையைப் பார்! என் மனதைப் போலச் செல்லும் நம் புஷ்பக விமானத்தைப் பார்! அது, சில இடங்களில், தேவர்கள் செல்லும் பாதையில் செல்வதைப் பார்! சில இடங்களில், அது காட்டு வழியில் செல்வதைப் பார்! சில இடங்களில் பறவைகள் செல்லும் வழியில் செல்வதைப் பார்! இங்கே உன்னுடைய கால் சிலம்பு வீழ்ந்த இடத்தைப் பார்!  பல குவளை மலர்கள் மலர்ந்திருக்கும் பம்பை வாவியைப் (குளத்தைப்) பார்! பஞ்சவடியிலே, கோதாவரி ஆற்றங்கரையிலே, நாங்கள் இருந்த பிரப்பங் கொடி வீட்டைப் பார்! சாதகர்ண முனிவருடைய சலக்கிரீடை வாவியைப் பார்! இங்கே தோன்றும் சுதீக்கண முனிவருடைய பர்ணசாலையைப் பார்! அத்திரி முனிவருடைய ஆசிரமத்தைப் பார்! இங்கே, கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் மூன்றும் கூடுகின்ற சங்கமம் தோன்றுவதைப் பார்! எதிரே வருகின்ற சரயு நதியையும் பார்!" என்று ஒவ்வொன்றின் சிறப்புகளையும் இராமன், சீதைக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே போகிறார்;

அப்போது, அயோத்தி நகர் மிக அருகில் வந்துவிட்டது புஷ்பக விமானம்;
நந்தி கிராமத்திற்கு வந்து இருந்த பரதனும், வசிட்ட முனிவரும், மந்திரிகளும், சேனைகளும், எதிர்கொண்டு வரவேற்றனர்;

இராமன் விமானத்திலிருந்து இறங்குகிறார்; முதலில் வசிட்டரை வணங்கினார்; பின்னர் பரதனைத் தழுவினார்இராமனை, மந்திரிகள் வணங்கினார்கள்; இலக்குமணர், பரதனை வணங்கினார்; பரதனும் சீதையை வணங்கினார்; சுக்ரீவன் முதலியவர்களை இராமன், இன்னாரென்று பரதனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்; பின்னர் அந்தப்புரத்திலிருந்த தாய்மாரும் கண்டு கொண்டாடினர்;

அன்றைய காலத்திலும் இதேபோன்ற Protocol முறையே சரியாக கடைப்பிடிக்கப் பட்டிருக்கின்றன;

பின்னர், இராமனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது;
சிலநாட்கள் கழித்தபின்னர், சீதை கர்ப்பவதியானார்........

**

Lingayats (வீரசைவம், லிங்காயத்)

Lingayats வீரசைவம், லிங்காயத்துகள்

"I must say a few words about Virasaivaism (வீரசைவம்), which is an off-shoot of South Indian Saivaism. The term means "Heroic faith in Siva".
Presumably, it was a sort of reform movement in the 12th century in the Mysore state, and the poetic works are all in Kannada, the language of the state.
From this mystic poetry we are able to gather that the founders and followers of thsi new cult were against the practice of building magnificent temples at tremendous cost and conducting liveless ceremonies and elaborate rituals.
Proclaiming the human body as the Temple of God, they wear about their necks Linga as the symbol of Lord Siva's constant presence. So, they are also known as 'Lingayats.'
The worship of the Siva in this amorphous and pillar-like image is considered an important religious practice. Because it burns evil and give soul the light of true wisdom, Lingam is called the 'pillar-of-fire.'
According to Arunachala Purana, Siva appeared as a tall pillar of fire to correct Brahma and Vishnu. Their attempts to find out the top and botoom of that pillar proved futile, and they surrendered at the feet of Siva.
According to the renowned Saiva Siddhanta scholar, Shivapadasundaram of Jaffna, "The word Linga literally means a graph, being derived from likh (to write). But Saiva philosophy splits it into 'layam' and 'gam', meaning that which causes involution and evolution of the universe.
Allama was the actual inspirer of Virasaivaism, and Basvadeva perfected it by establishing a centre at Kalyana, called 'Anubhava Mandapa' meaning 'mansion of experience.' From this title alone we can easily discern that both Allam and Basavadeva were critics of all privileges of birth, scholarship, and so forth, which formed the prominent feature at the time."
(This is an excerpt of the lectures of Mr. K.Ramachandra, on Hinduism, the Author of the book ‘Religious Digest’ who delivered his lecture at Colombo in 1971)
**

Terrestrial God and Celestial God


Terrestrial God and Celestial God:

மண்ணுலக தெய்வமும், விண்ணுலக தெய்வமும்:

Vaishnavism is one of the indigenous religions of the Tamils, ranking second to Saivaism. Vishnu Purana extols Vishnu as the supreme God-head. This is natural. No author of a Purana will fail to give the first place to his deity. The very purpose of a Purana is that. But all historical scholars and research students are agreed that Siva is the most ancient and the most important figure of the Indian pantheon. He is the pre-historic hero-God associated with radical vitality and renunciation. At Thiruvarur, one of the famous temples for him, He is addressed as Thiagarajah, __ the King of renouncers.

I do not know whether you have ever seen the figure of Vishnu in the recumbent position. This is His normal position in the most ancient and famous Temple of South India at Srirangam. The couch upon which Vishnu rests, - known as Anantasayana, - is formed of the long coils of a huge snake. The many-headed Adi-Sesha and Ananta are the two inseparable attendants upon Vishnu. Cosmologically speaking, the snake is the principle of time, continuity or eternity. The form reposing on its coils is that of Divine Principle.

Siva is reputed as a terrestial God, whereas Vishnu is a celestial one, coming to the world as an Avatar whenever truth, justice and righteousness decline and humanity has to be saved. This is the difference to be remembered for proper understanding of their respective functions. However, to the Vaishanavites, He is the supreme Divinity.

During the 3rd to 6th centuries A.D., Hinduism had faded all over India. Two sets of Saints appeared to resuscitate the theistic religious of Saivaism by Saiva Nayanmars and Vaishnavism by Alwars.
(This is an excerpt of the lectures of Mr. K.Ramachandra, on Hinduism, the Author of the book ‘Religious Digest’ who delivered his lecture at Colombo in 1971)
**
வெறும் பானை பொங்குமோ!


வெறும் பானை பொங்காது!

"செய்தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் -- வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! (நல்வழி-17)

நான் யார், நான் ஏன் பிறந்தேன்; என்னை ஆக்கியவன் யார்; நான் படும் துன்பத்திற்கும், நான் அனுபவிக்கும் இன்பத்துக்கும் காரணம் என்ன; என்ற அத்தனை கேள்விகளைக் கேட்டுக் கிடைத்த பதிலால் வந்ததே இந்து சமயம்;

உயிர்கள் உண்டு; கடவுள் உண்டு; செய்யும் செயலுக்கு ஏற்ப பயன் உண்டு; செயல் அறும் வரைக்கும் மறுபிறப்பு உண்டு; என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதே இந்து சமயம்; தனிப்பட்ட ஒருவரைச் சமயக் கடவுளாகக் கொள்ளாமல், தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது இந்து சமயம்; சிவன் என்றும், மால் (திருமால்) என்றும், பிரம்மன் என்றும் கூறுவதெல்லாம் தத்துவங்களை விளக்க வந்த குறியீட்டுப் பெயர்களே!

இதனாலேயே கிபி எட்டாம் நூற்றாண்டுக்கு உரியவராய்ச் சொல்லப்படும் மணிவாசகர் "ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ" என்று திருவாசகம் பாடினார்;

மேலே கூறிய இந்துசமயத் தத்துவத்தைத் தமிழ்த் தாயான அவ்வையார் மேற்படி நல்வழி வெண்பா மூலம் விளக்குகின்றார்;

துன்பம் வந்தபோதும், துயரம் நீங்காத போதும், வறுமை நெருங்கியவிடத்தும், நமக்கு விருப்பமான தெய்வத்திடம் போய் முறையிட்டு ஆறுதல் கேட்கிறோம்; ஆறுதல் கிடைக்காத போது, அந்தத் தெய்வத்தைக் குறைகூறி "உனக்குக் கண் இல்லையா! நீ வெறும் சிலைதானா!" என்று கேள்வி கேட்கிறோம்;

இப்படியான கேள்விகளைக் கேட்டவுடன் நமக்குத் தேவையான செல்வமும் ஆறுதலும் கிடைத்துவிடுமா? மனம் போன போக்கெல்லாம் போய், அறம் பிறழ்ந்த செயல்களைச் செய்ததன் பயனாக நாம் அனுபவிக்கின்ற சிரமங்களை இல்லாமல் ஒழிப்பதற்குத் தெய்வத்திடம் போவதால் உடனடியாகப் பயன் என்ன விளைய முடியும்? கஷ்டங்களைத் தாங்குவதற்கான பலத்தைத் தெய்வம் தரமுடியும்; கஷ்டத்தை நீக்கத் தெய்வம் உதவாது; உதவும் முடியாது; ஏனென்றால், அது வினைப்பயன்! வினை விதைத்தவனே வினையை அறுவடை செய்தாக வேண்டும்; வேறு வழியில்லை;

இந்தப் பிறவியில் நல்வாழ்வு கிடைக்கவில்லையே, பிறந்த நாளிலிருந்து இந்நாள்வரை துன்பத்தின்மேல் துன்பம்தானே வந்து கொண்டிருக்கிறது என்று இப்போது புலம்பி என்ன பயன்? வெறும் பானையை அடுப்பில் வைத்து எரித்துவிட்டுப் பொங்கி வரவில்லையே என்று அங்கலாய்க்கலாமா? பானையில் அரிசி போட்டிருந்தால் அது தானே பொங்கி வந்திருக்கும்! வெறும் பானை எப்படி பொங்கும்? வரும் பிறவியில் நன்மை வேண்டும் என்பதற்காக இன்று நல்ல காரியங்களைச் செய்தால்தானே மற்ற பிறவிகளில் நன்மை அனுபவிக்க முடியும்;

ஆகவே இன்றே நன்மை செய்வோம்; அதுதான் இம்மையிலும் மறுமையிலும் உங்களைத் துயரக்கடலில் ஆழாமல் மிதக்கச் செய்யும் தெப்பமாக உதவும் என்று அவ்வை சொல்கிறாள்;

இன்று நீங்கள் துன்பப்படுகிறீர்கள் என்றால் அதற்குக் காரணம் நீங்கள் கடந்த பிறவியில் செய்த வினைதான்; நல்வினைக்கு நற்பயனும், தீவினைக்கும் தீயபயனும் உண்டு; இந்த நிலையை மாற்ற முடியாது; ஆகவே இயன்ற போதெல்லாம் அறம் செய்யுங்கள்; மறம் தவிருங்கள் என்கிறாள் அவ்வை;

அவ்வையார் கூறிய மேற்படி கருத்தை அவருக்குப் பல்லாண்டுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவரும் வேறொரு விதமாகச் சொல்லி இருக்கின்றார்; "அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை."

அதோ பாருங்கள்! ஒருவன் பல்லக்கின் மேல் அமர்ந்திருக்கிறான்; வேறு நான்குபேர் அந்தப் பல்லக்கைக் தூக்கிக் கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நடந்து கொண்டிருக்கிறார்கள்; பல்லக்கில் இருப்பவன் (ஊர்பவன்) அப்படிச்  சொகுசாக இருப்பதற்கும், பல்லக்கைக் தூக்கிச் செல்பவர்கள் துன்பப்படுவதற்கும் காரணம் என்ன? அவர்களின் வாழ்க்கை முறையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணம் என்ன? என்று கேட்டுவிட்டு, மறுமொழியாக வள்ளுவனே சொல்கிறார்; காரணம் காண வெகுதூரம் போகத் தேவையில்லை; பல்லக்கில் ஊர்பவன் செய்த புண்ணியம் அவனுக்கு சுகவாழ்வு அளித்துள்ளது; பல்லக்குத் தூக்குபவன் பாவம் அவர்களுக்கு அடிமை வாழ்வு கொடுக்கப் பட்டுள்ளது: ஆகவே நற்செயலின் விளைவைப் புரிந்து கொள்வதற்கு அங்கே இங்கே என்று நாம் எங்கும் போகத் தேவையில்லை; பல்லக்குக் காட்சியைப் பார்த்தால் போதும் என்று வள்ளுவன் விளக்கம் அளிக்கிறார்;

அவ்வையோ, அடுப்படிக் காட்சியை காட்டி, வெறும்பானை பொங்குமோ? என்று கேட்கிறார்;
(நன்றி: சிறீ கந்தராசா அவர்களின் "அவ்வையார் காட்டிய வழி" என்ற நூலில் இருந்து ஒரு சிறு பகுதி இங்கு)
**பூமியைப் பற்றிய ஆச்சரியங்கள்--3

பூமியைப் பற்றிய ஆச்சரியங்கள்--3

பூமியைப் போலவே இருக்கும் கிரகம்தான் சுக்கிரன்; இதை Venus வீனஸ் என்கின்றனர்; சுக்கிரனின் விட்டம் சுமார் 12,000 கி.மீ.; பூமியின் விட்டமும் கிட்டத்தட்ட இதே 12,000 கி.மீ.தான்; சுக்கிரன், சூரியனை ஒருமுறை சுற்ற 224 நாட்கள் எடுத்துக் கொள்ளும்; சுக்கிரனின் சுற்றுப் பாதையானது கிட்டத்தட்ட வட்ட வடிவிலேயே இருக்கும்; மற்ற கிரகங்களுக்கு நீள் வட்டத்தில் இருக்கும்; சூரியனிலிருந்து 10 கோடியே 75 லட்சம் கி.மீ தூரத்தில் சுக்கிரன் இருக்கிறது; பூமி, சூரியனிலிருந்து 15 கோடி கி.மீ தூரத்தில் இருக்கிறது; அப்படிப் பார்த்தால் பூமியிலிருந்து சுக்கிரன் நாலேகால் கோடி கி.மீ. தூரத்தில்தான் இருக்கிறது;

பூமியிலிருந்து செவ்வாய் இருக்கும் தூரம் ஐந்தரைக் கோடி கி.மீ. அப்படிப் பார்த்தால், பூமியிலிருந்து சுக்கிரனே மிக அருகில் இருக்கிறது; சுக்கிரனே மிக அதிக பிரகாசமாகத் தெரியும்; பூமியிலிருந்து பார்ப்பதற்கு சாதாரண கண்ணுக்குத் தெரியும் கிரகம் இந்தச் சுக்கிரன்தான்; இந்தச் சுக்கிரன், சூரியனுடன் காலையில் கிழக்கில் தோன்றும்; மாலையில் மேற்கில் சூரியனுடன் மறையும்; அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே கீழ்வானில் இது பளிச்சென்று தோன்றும்; இதைத்தான் “விடிவெள்ளி” என்பர்; விடியப் போகிறது என்பதை பழங்காலத்தில் இந்த சுக்கிரன் என்னும் விடிவெள்ளியை வைத்துத்தான் கணக்கிட்டனர்;


சுக்கிரனும் வெப்பமாகவே இருக்கும்; சூரியனுக்குப் பக்கத்தில் இது இருப்பதால், இதன் வெப்பம் 427 டிகிரியாம்; எனவே அங்கு தாவரங்களோ, மற்ற உயிரனங்களோ வாழ வாய்ப்பில்லை என்கின்றனர்; 
**

பூமியைப் பற்றிய ஆச்சரியங்கள்--2

பூமியைப் பற்றிய ஆச்சரியங்கள்--2

சந்திரன், பூமியைச் சுற்ற ஒரு மாதம் எடுக்கிறது; மிகச் சரியாகச் சொன்னால், 27 நாட்கள் 7 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது; பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட அதிகபட்ச தூரம் சுமார் 4 லட்சம் கி.மீ; குறைந்தபட்ச தூரம் சுமார் மூன்றே முக்கால் லட்சம் கி.மீ;

பூமியில் உள்ள காற்றுதான், சூரியனின் வெப்பத்தை ஒரளவு தடுத்து குறைக்கிறது; காற்று இல்லாவிட்டால், பூமி சூடாகிவிடும்: அந்தச் சூடு குறைய நாட்கணக்கில் நேரமாகும்;

சூரியன் நெருப்புக் கோளமாகவே இருக்கிறது; அத்தனையும் வாயு; எல்லா நட்சத்திரங்களையும் போலவே, சூரியனும் ஒரு வாயு கோள் ஆகும்; அது நெருப்புக் கோளமாக இருப்பதால், அது தன்னைத் தானே சுற்றினால், ஒரேமாதிரியாகச் சுற்ற முடியாது; காற்று சுற்றுவதுபோலவே சுற்றவேண்டி இருக்கும்! சூரியனின் நடுப்பகுதியான உள்பகுதி வேகமாகச் சுற்றும்; அது தன்னைதானே அப்படி உள்பகுதி சுற்றவர 25 நாட்கள் ஆகுமாம்; சூரியனின் வெளிப்பகுதி கொஞ்சம் மெதுவாகச் சுற்றுமாம்; அது தன்னைத்தானே சுற்றிவர 34 நாட்கள் எடுக்குமாம்; சூரியனைப் பற்றிய ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாட்டில் கொடைக்கானலில் உள்ளது; சூரியனின் ஆராய்ச்சி நிலையம் கலிபோர்னியாவிலும் உள்ளது;

பௌர்ணமியை பூரணை என்பர்; பூரணை நாட்களில் சந்திர கிரகணம் ஏற்படும்; அமாவாசை நாட்களில் சூரிய கிரகணம் ஏற்படும்; ஆனால் எல்லா மாதங்களிலும் இந்த கிரகணங்கள் நிகழாது; சந்திரனின் நிழல் சுமார் 80 கி.மீ. பரப்பளவில் மட்டுமே பூமியில் விழும்; எனவே அந்தப் பகுதி மட்டுமே கிரணம் தெரியும்; அவ்வாறான சூரிய கிரகணம் சுமார் 7 நிமிடம் 58 நொடிகள் மட்டுமே இருக்கும்; ஆனால் சந்திர கிரகணம் மணிக்கணக்கில் இருக்கும்; ஒரு வருடத்தில் ஏழு கிரகணங்களுக்குமேல் நிகழாதாம்; அப்படி ஏழு கிரகணத்தில், 5 சூரியகிரகணமும், 2 சந்திரகிரகணமும் ஆகும்; அல்லது 4 சூரிய கிரகணம், 3 சந்திர கிரகணம் நடக்கலாமாம்; ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் இரண்டு சூரிய கிரகணத்துக்கு குறையாமல் நடக்குமாம்;

சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் உள்ள கிரகங்கள் புதனும், சுக்கிரனும் ஆகும்; இந்த இரண்டும் சூரியனுக்கு அருகில் உள்ள கிரகங்கள்; சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் இருப்பதால் இதை உட்கிரகங்கள் என்கின்றனர்; இந்த இரண்டு கிரகங்களும் சில நேரங்களில் பூமியின் பாதை வழியாகவும் செல்லுமாம்; மற்ற கிரகங்களான, செவ்வாய், வியாழன் (குரு), சனி, இவைகள் பூமிக்கு வெளிப் பாதையில் உள்ள கிரகங்கள்;

புதன் கிரகம் சூரியனுக்கு அருகில் உள்ளது; இது பூமியின் உட்கிரகம்; புதன் கிரகம், சூரியனிலிருந்து அருகில் சுமார் 4 கோடியே 60 லட்சம் கி.மீ தூரத்தில் உள்ளது; தூரத்தில் 7 கோடி கி.மீ தூரத்தில் உள்ளது; இருக்கும் எல்லா கிரகங்களைக் காட்டிலும் புதன் தான் மிகச் சிறிய கிரகம்; இதன் குறுக்களவு (விட்டம்) 4,800 கி.மீ. (பூமி 12,000 கி.மீ.) அதாவது சந்திரனைவிட புதன் ஒன்றரை மடங்கு மட்டுமே பெரியது; புதன் ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 88 நாட்கள் எடுத்துக் கொள்ளும்; புதன் தன்னைத்தானே சுற்றவும் 88 நாட்கள் எடுத்துக் கொள்ளும்; அதனால், புதனுக்கு 88 நாட்கள் ஒருபகல் பொழுது; 88 நாட்கள் ஒரு இரவுப் பொழுது இருக்கும்; சூரியனுக்கு பக்கத்தில் இருக்கும் புதனில் வெப்பம் 400 டிகிரியாக இருக்குமாம்; கொஞ்சம் தூரத்தில் சுற்றும்போது 280 டிகிரியாக இருக்குமாம்; 100 டிகிரியே வெந்து போய்விடும்; புதனின் மறுபாதி சூரியனைப் பார்க்காமல் இரவாக இருக்கும் பகுதியில் கடும் குளிராக இருக்குமாம்; என்ன வேடிக்கை! அதனால், புதனில் உயிர் இனங்கள் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறார்கள்;


சுக்கிரன் கிரகமானது பூமியைப் போன்றே இருக்குமாம்; அதன் குறுக்களவு பூமியைப் போலவே சுமார் 12,000 கி.மீ. சுக்கிரன், சூரியனைச் சுற்றிவர 224 நாட்கள் எடுத்துக் கொள்ளுமாம்; சுக்கிரன் சூரியனிலிருந்து சுமார் 11 லட்சம் கோடி கி.மீ.; சூரியனிலிருந்து பூமி 15 கோடி கி.மீ. தூரம்; சுக்கிரன் உள்கிரகம்; அதாவது சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்டு உள்ள கிரகம்; (புதனும், சுக்கிரனும் உட்கிரகங்கள்); பூமிக்கு அருகில் உள்ள துணை கிரகம் சந்திரன்; அதற்கு அடுத்து, பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம் இந்த சுக்கிரன்தான்; 
**

பூமியைப் பற்றிய ஆச்சரியங்கள்--1

பூமியைப் பற்றிய ஆச்சரியங்கள்-1
பூமி உருண்டையாக இருந்தாலும், அதன் மேல், கீழ் பகுதிகள் சிறிது தட்டையாகவே இருக்கிறது; வடதுருவம் தென்துருவம் என்று இரு துருவங்கள் உண்டு; பூமியின் மேல், கீழ் பகுதிகள் இவை; மேலிருந்து கீழ் உள்ள நீளம் சுமார் 12,600 கி.மீ; பூமியின் நடுப்பகுதிக்குப் பெயர் பூமத்திய கோட்டுப் பகுதி; இதன் நீளமும் கிட்டத்தட்ட அதே 12,600 கி.மீ. தூரம்தான்; 

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் இயல்புடையது; அதற்கு சுமார் 24 மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும் (மிகச் சரியாகச் சொன்னால் 23 மணி 56 நிமிடம் எடுத்துக் கொள்ளும்); பூமியானது சூரியனைச் சுற்றி வர ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும் (மிகச் சரியாகச் சொன்னால், 365-1/4 நாட்களை எடுத்துக் கொள்ளும்); சூரியனிலிருந்து பூமியின் தூரம் சுமார் 15 கோடி கி.மீ; சூரியனை விட்டு பூமி தூரத்தில் இருக்கும்போது அதன் தூரம் 15 கோடியே 13 லட்சம் கி.மீ; பக்கத்தில் இருக்கும் போது அதன் தூரம் 14 கோடியே 88 லட்சம் கி.மீ; அப்படிப் பார்த்தால், வித்தியாசமான தூரமே சுமார் 25 லட்சம் கி.மீ; இப்படியாக 25 லட்சம் கி.மீ தூரத்தில் இருக்கும்போதே இப்படி வெயில் அடிக்கிறது என்றால், 25 லட்சம் கி.மீ.க்கு குறைவான தூரத்துக்கு வந்தால், வெயில் எப்படி இருக்கும்; சூரியனின் நெருப்பில் எறிந்து போய்விடுவோம்; 

பூமியைவிட, சூரியன் 3 லட்சம் மடங்கு கனமானது; சூரியனின் வெப்பமானது ஆறாயிரம் டிகிரி; 100 டிகிரிக்கே கை வெந்துபோய்விடும்; ஆறாயிரம் டிகிரி என்றால்!
பூமியின் உட்புறம் எப்படி இருக்கும் என்று யாரும் கணிக்க முடியவில்லையாம்; பூமிக்கு அடியில் ஒரு கி.மீ. தூரத்துக்கு அப்பால், இந்த பூமி எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது; பூகம்பம், எரிமலை இவற்றைக் கொண்டே, பூமிக்கு அடியில் எப்படி இருக்கும் என்று யூகித்துள்ளனராம்; பூமியின் உட்பகுதி கொதிக்கும் நெருப்புக் கோளமாகவே இருக்கும் என்றே நம்புகிறார்கள்;
கடலில் உள்ள உப்பு ஒவ்வொரு வருடமும் எவ்வளவு அதிகமாகிக் கொண்டு வருகிறது என்பதைக் கணக்கிட்டுள்ளனர்; அதைக் கொண்டு, ஒரளவு, இந்த பூமி தோன்றி எவ்வளவு காலம் ஆகிஇருக்கலாம் என்று யூகிக்கின்றனர்;
பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம் (உபகிரகம்) சந்திரன்;
சூரியனின் குறுக்களவு 13 லட்சம் கி.மீ; ஆனால் பூமியின் குறுக்களவு சுமார் 13 ஆயிரம் கி.மீ; அப்படியென்றால், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள வித்தியாசம் ஆயிரத்திலும், லட்சத்திலும் இருக்கிறது; ஆகா, எப்படிப்பட்ட சூரியனாக இருக்கிறது!
**

Friday, March 25, 2016

தொப்புள் கொடி

தொப்புள் கொடி

“நாபிக் கொடி அல்லது தொப்புள் கொடியானது, சிசுவின் நாபியோடும் மாயையின் மத்தியிலும் ஒட்டிக் கொண்டிருக்கும்; சில சமயங்களில் மாயையின் ஓரத்திலும் ஒட்டிக் கொண்டிருப்பதும் உண்டு; இது 12 அங்குலம் முதல் 50 அங்குலம் வரை நீளமுள்ளதாயும் சில சமயம் சிசுவின் கழுத்தைச் சுற்றிக் கொண்டும் இருக்கும்; இந்தக் தொப்புள் கொடி, சிசுவின் சந்து எலும்பின் உட்புறத்திலிருந்து வரும் இரண்டு நாடிகளாலும் மாயையினின்று வரும் இரத்தத்தை சிசுவிற்குத் திருப்பிக் கொண்டு வருகின்ற ஒரு நாளத்தினால் உண்டானது; இந்த இரத்தச் சரங்களெல்லாம் பிசின் தன்மையுள்ள ஒரு வஸ்துவினால் ஒட்டப்பட்டு முறுக்குற்று நெழிந்திருக்கின்றன; சிசு ஜனித்து சுமார் 20 நிமிசம் சென்றதும் அதிலிருந்து நாடி ஓட்டம் நின்றுவிடும். நாபிக் கொடியை துண்டித்த பிறகு அது ஐந்து அல்லது ஆறாம் நாளில் உலர்ந்துவிடும்;


(மானிட மர்ம சாஸ்திரம் என்ற நூலில் (1918-ம் ஆண்டு பதிப்பு) அதன் ஆசிரியரான எஸ்.சாமிவேல் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக, ஈழத்து பூராடனார் எழுதிய “உலகளாவிய தமிழ்" என்ற நூலில் தன் நினைவுகளைக் குறிப்பிடுகிறார்).
**

மானிட தர்ம சாஸ்திரம்” (1908-ம் ஆண்டு)

“மானிட தர்ம சாஸ்திரம்” (1908-ம் ஆண்டு)
(இந்த நூல் பற்றி ஈழத்துப் பூராடனார் “உலகளாவிய தமிழ்” என்ற நூலில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.)

1956-ம் ஆண்டு மாசி மாதத்தில் ஒரு ஞாயிறு வாரத்தன்று நான் ஒரு முடிதிருத்தும் நிலையத்திற்குப் போயிருந்தேன்; அந்த நிலையம் ஈழத்தின் தென்பாகத்தில் அமைந்திருந்தது; அதன் சொந்தக்காரர் ஒரு தமிழர்;  ஆனால் அப்பகுதியில் சிங்களமொழி பேசும் சிங்கள மக்களே மிகப் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தனர்; அந்த நிலையத்தில் முகம் மழித்தபின்னர் வழித்தெறியும் சவக்காரத்தைத் துடைத்தெறிய கடதாசியைப் பாவிப்பார்கள்; அவ்வாறு அன்று பாவிப்பதற்காக ஒரு புத்தகத்தை வைத்துக் கிழித்துப் பாவித்தார்கள்; பொன்முலாம் எழுத்திட்டு அழகாகக் கட்டிய அந்தப் புத்தகம் ஒரு தமிழ்ப் புத்தகம்; ஏறக்குறைய மூன்றங்குல உயரமானது; அங்கு எனது முறைவரும் வரையுங் காத்துக் கொண்டிருந்த நான் எனது காத்திருக்கும் நேரத்தைக் கழிப்பதற்காக அதனை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்; அது கிடைத்தற்கரிய ஒரு நூலாக இருந்தபடியால் அதற்கு ஈடாகத் தினத்தாள்களைக் கொடுத்து அதை நான் எனது சொந்தமாக்கிக் கொண்டேன்; அந்த நூல்தான் இக்கட்டுரையை வரைவதற்கு எனக்கு ஆதாரமாக இருந்தது;

அதன் விபரமாவது;
நூலின் பெயர்: மானிட மர்ம சாஸ்திரம்;
பதித்த இடம்; தென்காஞ்சி- இரங்கூன், சாமிவேல் பிரஸ்;
முதற்பதிப்பு; 1908
இரண்டாம் பதிப்பு; 1918
அளவு: 12 பாகங்களைக் கொண்ட 1000 பக்கங்கள் 250 விளக்கப் படங்கள்
நூலின் ஆசிரியர்: எஸ்.சாமிவேல் (வீ.ஏ)
நூலாசிரியரின் விபரங்கள்: கல்கத்தா சர்வ சங்கத்தின் தமிழ்ப் பரீட்சகர், ரெங்கூன் சென் ஜோன்ஸ் கலாசாலைப் பிரதம ஆசிரியர், கணித சாத்திரம், பூமி சாத்திரம் எனும் நூல்களையும் இயற்றியவர்; மானித மர்ம சாத்திரப் பண்டிதர் வைத்திய சாமிவேல் வைத்திய சாலையின் தலைவர்; ஆங்கிலம், தமிழ், வடமொழிப் பண்டிதர்;

இதன் அரங்கேற்றம் 24.6.1908-ம் தினத்தன்று இரங்கூனில் நடைபெற்றபோது, இந்தியாவிலிருந்து மதுரைத் தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாகத் தண்டாலயம் பாலசுந்தரம்பிள்ளை என்பவர் வந்திருந்தார்; இவர் மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சகர்; இவர் தனது மதிப்புரையில் ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்;
Some books are to be tasted, others to be swallowed and some to be chewed and digested.” என்று Bacon கூறினார்; I sincerely hope that the book which is the first of kind in Tamil என்று சங்க முத்திரையிட்டுள்ளார்; அத்துடன் தமிழில் இது ஒரு சித்தாந்த, வேதாந்த, வைத்திய, வாழ்க்கை நூற் களஞ்சியம் என்றும் கூறியுள்ளார்;
**

உலகத் தமிழர் எண்ணிக்கை

உலகத் தமிழர் எண்ணிக்கை

(நன்றி: "ஈழத்துப் பூராடனாரின் உலகளாவிய தமிழ்” என்ற நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது)
(உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க வெளியீடான தமிழியத்தின் 1983ம் ஆண்டு வெளியீட்டிலிருந்து)
(குறிப்பு; இந்த புள்ளி விபரங்கள் 24.8.1983, 26.4.1983 ஆகிய நாட்களில் தினமணி நாளேட்டில் தரப்பட்ட புள்ளி விபரங்களின் ஆதாரங்களிலிருந்து திரட்டப்பட்டவைகளாம்)


நாடு
மொத்தமுள்ள தமிழர்கள்
குடியுரிமை பெற்றவர்கள்
1.
தமிழ்நாடு


2.
இலங்கை
13,50,000
12,02,000
3.
மலேசியா
12,08,500
10,09,500
4.
மொரிசியசு
6,23,500
6,12,527
5.
பீஜீ தீவு
3,00,697
3,00,650
6.
பர்மா
3,00,000
---
7.
சிங்கப்பூர்
3,00,000
2,08,000
8.
அந்தமான்
85,224
85,224
9.
இந்தொனேசியா
35,000
29,000
10.
தென்னாப்பிரிக்கா
5,00,000
5,00,000
11.
ரியூனியன்
2,00,000
2,00,000
12.
கயானா-பிரி
4,24,400
4,24,100
13.
கெனியா
79,000
72,500
14.
ஜமைக்கா
50,318
50,000
15.
நெதர்லாந்து
1,10,000
1,00,000
16.
ஏமன்
1,00,000
99,500
17.
திரினிடாட்
4,21,000
4,20,000
18.
சூரிநாம்
1,24,900
1,24,750
19.
குவாத்லூப்
21,000
21,000
20.
மார்தினிக்
13,000
13,000
21.
பிரஞ்சு கயானா
6,000
6,000
22.
பிரிட்டன்
5,00,000
2,50,000
23.
வட அமெரிக்கா
3,00,000
35,000
24.
கனடா
1,75,000
95,000
25.
நியூசிலாந்து
10,000
9,200
26.
ஆஸ்திரேலியா
18,999
15,985
27.
போர்ச்சுக்கல்
6,000
5,939
28.
மொசாம்பிக்
22,043
21,792
29.
தான்சானியா
59,000
55,000
30.
பிரான்சு
30,000
-----
31.
ஐ.அரபு குடியரசு
1,52,000
2,000
32.
சவுதி அரேபியா
2,50,000
2,000
33.
குவைத்
65,000
100
34.
ஈராக்
20,250
100
35.
ஈரான்
20,800
920
36.
உருசியா
750
2
37.
காங்காங்
300
---
38.
கி.செர்மனி
100
---
39.
ஆப்கான்
30,000
25,000
40.
பொலந்து
49
----
41.
யூகோசிலவாகியா
50
----

(இந்த புள்ளி விபரங்கள் இப்போது பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளது; 1983ல் உள்ள தமிழர் தொகையை ஒரு குத்துமதிப்பாக தரப்பட்டுள்ளது).

**