Thursday, April 10, 2014

தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதிவகையும்.....

மாணிக்கவாசகர்:
 இவர், அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் அமைச்சனாக இருந்தவர்.
பாண்டிய மன்னன் குதிரை வாங்கி வரும்படி கூறிய பணத்தை எல்லாம் சிவம் ஆலயத்தின் திருப்பணிக்குக் கொடுத்துவிட்டு வந்து விட்டார். குதிரைகள் எங்கே என்று மன்னன் கேட்டால் என்ன சொல்வது என்று கலங்கியபோது, சிவன் அவரை காத்து, நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி இவருடன் அனுப்பினார். இதை, 'நரியைப் பரியாக்கி நிகழ்ச்சியாக திருவிளையாடலில் கூறப்பட்டுள்ளது.'

ஆனால் அந்த குதிரைகள் பின்னர் நரியாக மாறியதால் மன்னர் அமைச்சர் மீது கோபம் கொண்டு அவரை தண்டிக்க எத்தனிக்க, சிவன் மறுபடியும் தனது திருவிளையாடல் மூலம் வைகை நதியை பெருக்கெடுத்து கரைகடந்து ஒடச் செய்தார். கரையை பலப்படுத்த மன்னன் மக்களை கேட்டு, அங்கு சிவனே, ஒரு வயதான தாய்க்கு இவளின் பிரதிநிதியாக அவள் கொடுத்த பிட்டுக்கு கூலியாக சிவன் வேலையாளாக சென்று மன்னனிடம் பிரம்படி பெற்று ஒரு திருவிளையாடலும் நடத்தினான்.

மாணிக்கவாசகர் பாண்டியனின் அமைச்சர் பதவியிலிருந்து விலகி சீவன் முத்தராய் சிவனை வேண்டி முக்தி நெறியில் திழைத்தபோது, திருவாசகமும், திருக்கோவையாரும் பாடினார்.

அப்போது இருந்தவந்து புத்தமதத்தினரை வாதில் வென்று சைவ சமயத்தை ஸ்தாபித்தார்.

இவரின் சிறுவயதுப் பெயர் 'வாதவூரார்.இவருக்கு பாண்டிய மன்னனால் சூட்டப்பட்ட பட்டப்பெயர் 'தென்னவன் பிரமராயன்'. இவர் 4000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்.

இவர் செய்த திருவாசகத்திலே, பல அறியப்படாத அநேக சரித்தரங்களும், க்ஷேத்திரங்களும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

இவர், புற உலகில் காண்பதை எல்லாம், சிவனுடன் சம்மந்தப்படுத்தியே எடுத்துக் கூறுவார். இவர் திருவண்ணாமலையில் வசித்து வந்தபோது, அங்குள்ள பெண்கள் எல்லாம் விடியற்காலையிலே எழுந்து சிவனின் ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டு அடுத்த வீட்டுப் பெண்களை எழுப்பி நீராட அழைப்பார்கள். இந்தச் செயலை 'சிவசக்திகள் சிருஷ்டியின் பொருட்டு ஒருவரையொருவர் எழுப்புவதாக பாவித்துக் கொண்டு 'திருவெம்பாவையைப்' பாடி அருளினார்.

இவரின் 'கல்லையும் கரைக்கும் திவ்விய வாய்ச் சொல்லை சொல் என்று கூறலாகாது'
'தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமாரெமதார் பாசமா
ரென்னமாயாமிவை போகக்
கோமான் பண்டைத் தொண்ட
ரொடு மவன்றன் குறிப்பேகுறிக் கொண்டு
போமாறமைமின் பொய் நீக்கிப் புயங்க்கனாள் வான் பொன்னடிக்கே.'

சிதம்பரத்திலே சிவனுடன் இரண்டறக் கலந்தபோது இவருக்கு வயது 32 மட்டுமே.


No comments:

Post a Comment