சிரார்த்தம்:
பிதிர் கன்மம். பிர்தேவதைகளுடைய திருப்திக்காக செய்யப்படும் பிண்ட கருமம்.
இது
சுப-கருமமாகவும், அசுப-கருமமாகவும் செய்யப்படும்.
சுப-கருமத்தில் செய்யும் சிரார்த்தம் 'நாந்தி' 'அப்பியுதம்' என்றும்; அசுப-கருமத்தில்
செய்யப்படும் சிரார்த்தம் 'நேகம்' என்றும்
பெயர்.
அவற்றுள், பிரேத சிரார்த்தம் என்பது பிரேத திருப்தியின் பொருட்டு
செய்யப்படுவது.
பைதிருக
சிரார்த்தம் பிதிர்தேவதைகளின் பொருட்டு செய்யப்படும். பிதிர் தேவதைகள் வசுருத்திர
ஆதித்திய பதப்பேறுடையவர்களா இருப்பவர்கள். காசி, கயை,
பிரயாகை, குருக்ஷேத்திரம், கோகர்ணம், குருஜாங்கலம், புஷ்கலக்ஷேத்திரம்,
முதலியன சிரார்த்த கருமங்களுக்கு சிறந்த ஸ்தலங்கள். இவற்றில்
கயாவில் செய்வது மிகுந்த பலனளிக்கும்.
இறந்த தினம், அமாவாசை, மகாளயபக்ஷ முதலிய நாட்கள்
சிரார்த்தத்துக்கு உரிய காலங்கள்.
No comments:
Post a Comment