Sunday, June 21, 2020

வக்கீல் பீஸ் வழக்கு

வக்கீல் பீஸ்

1886-ல் நடந்த ஒரு வழக்கில் 1-வது பிரதிவாதிக்காக வக்கீல் நியமிக்கப்படுகிறார். அதற்காக ரூ.25 வக்கீல் பேசி ஒப்புக் கொள்கிறார். அதற்காக ஒரு புரோ நோட்டை வக்கீலுக்கு எழுதிக் கொடுக்கிறார்.

ஆனால், அந்த வழக்கைப் போட்டவர் பின்னர் வாபஸ் வாங்கி விடுகிறார். எனவே வக்கீலுக்கு அதில் அதிகம் வேலை இருக்கவில்லை. இருந்தாலும் மொத்த பீஸ் கேட்கிறார். அதற்கான புரோ நோட்படி தனக்கு ரூ.25 வேண்டும் என்று வழக்குப் போடுகிறார்.

புரோ நோட்டை எழுதிக் கொடுத்த பார்ட்டி, அந்த புரோ நோட்டை தானே எழுதிக் கொடுத்ததாக ஒப்புக் கொள்கிறார். ஆனால், அந்த வழக்கு இடையேலேயே வாபஸ் ஆகி விட்டதால், இப்போது அதற்கு அவ்வளவு பீஸ் கொடுக்க முடியாது என்கிறார்.

செக்சன் 29 வக்கீல் சட்டம் (Sec.29 of the Legal Practitioners’ Act) என்ன சொல்கிறது என்றால்: வக்கீல் தனக்குச் சேரவேண்டிய பீஸ் தொகைக்கு பத்திரங்கள் எழுதி வாங்கினால், அந்தப் பத்திரத்தை எழுதிய தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட கோர்ட்டில் அதை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால் இந்த வழக்கில் வக்கீல் அவ்வாறு தாக்கல் செய்யவில்லை. அதை தன் கைவசமே வைத்திருந்தார். எனவே அந்த புரோ நோட் செல்லாது என்று கோர்ட் சொல்லி விட்டது.

மேலும் ரூ.25/- வக்கீல் பீஸ் அதிகமா அல்லது சரியா என்ற கேள்வி வந்தது. அந்த வழக்கில் வாதி தன் வழக்கை பாதியில் வாபஸ் வாங்கி விட்டார். எனவே இந்த வக்கீலுக்கு அதில் அதிக வேலை இல்லை. இருந்தாலும், அவரின் உழைப்புக்கு ரூ.7 போதும் என்று முடிவு செய்கிறது சென்னை ஐகோர்ட். (இந்த வழக்கு 1890-ல் சென்னை ஐகோர்ட்டில் நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்).

**


சிவயோக நிஷ்டை

சிவயோகநிஷ்டி

1734 ஜூன் மாதம் சிவகங்கையின் முதல் ஜமின்தார் ஒரு தர்ம கட்டளையை (Charity Grant) ஏற்படுத்துகிறார். அவர் தனது குருவான சாத்தப்பையர் நினைவாக இதை ஏற்படுத்தி வைக்கிறார். இந்த தர்ம கட்டளை, ஒரு சிஷ்யன் தன் குருவுக்கு ஏற்படுத்தி வைப்பது போன்றது. The relation between the grantor and the grantee was that of disciple and preceptor. இந்த தர்ம கட்டளையை காலங்காலத்துக்கு நிலைத்து இருக்க வேண்டியும், சூரியன் சந்திரன் உள்ள காலம் வரை தொடரவேண்டும் என்றும், அதுவரை இந்த குரு சிஷ்ய பரம்பரை தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதில் இருக்கும் சொத்துக்களை மடத்தின் அத்தியாவசியத் தேவையைப் பொறுத்து விற்று வாங்கிக் கொள்ளாலம் என்றும், மடத்தை பாதிக்கும் எந்த வில்லங்கங்களையும் ஏற்படுத்த கூடாது என்றும் அந்த தர்ம சாசனத்தில் குறிக்கப் பட்டுள்ளது.

இப்படி, சிவகங்கையில் உள்ள ஜமின்தாரின் சில நிலங்களை இந்த தர்ம ஸ்தாபனமான மடத்துக்கு எழுதி்க் கொடுத்துள்ளார். இந்த மடத்தில் தன் குரு சாத்தப்பையர் நினைவாக சிவயோகநிஷ்டி யோகத்தையும் மற்ற சில யோகங்களையும் பயிற்றுவிப்பதும் செய்வதும் நடக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார். இந்த மடத்துக்கு ஒரு தலைமையை (பரதேசியை) நியமிக்க வேண்டும் என்றும், அந்த நிலத்தில் மடத்தின் கட்டிடங்களை கட்ட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு நிலங்களை தன் குரு சாத்தப்பையருக்கு குருபூஜை மற்றும் தெகபூஜை செலவுகளுக்கு தனியே ஜமின்தார் ஒதுக்கி உள்ளார்.

சிவயோக நிஷ்டி என்பது சிவனை வணங்கும்போது, காலையும் மாலையும் முறையே ஐந்து எழுத்து மந்திரமான பஞ்சாட்சரத்தையும், எட்டு எழுத்து மந்திரமான அஷ்டாச்சரத்தையும் உச்சரித்து வழிபடுவது. Sivagoga nishti is a form of meditating on god Siva in conventional use among paradesis or men of piety, and it consists in uttering alternately for a certain time, once in the morning and once in the evening, the two sacred words of five and eight lettrers, respectively, called pamchaksharam and ashtaksharam with one’s attention devoutly centered in God and in the attituded prescribed for religious mediation.

குருபூஜை என்பது குருவின் நினைவாக வருடத்துக்கு ஒரு முறை வழிபாடு செய்வது. அதன் மூலம் குருவின் நல் அருளைப் பெறமுடியும். The expression “gurupuja” signifies the annual ceremony performed by the head of the mutt for the time being in honour and for the spiritual benefit of his guru.

தெகபூஜை என்பது அறவழியில் வாழ்பவர்களையும் மத வழியில் வாழ்பவர்களையும் ஆதரிப்பது. The word “dehapuja” means, in polite language, the self-support of a person who has a sacred or religious status.

இவை அல்லாமல், மேலும் இரண்டு தர்ம காரியங்களும் குறிப்பிடப் பட்டுள்ளது. குருபூஜை நாளில் பரதேசிகளுக்கும் சூத்திர சந்நியாசிகளுக்கும் சாப்பாடு அளிப்பது. மேலும் கோடைகாலத்தில் எல்லா நாளும் தண்ணீர், மோர் பந்தல் ஏற்படுத்தி எல்லா மக்களின் தாகம் தீர்ப்பது.

தர்ம சாசனத்தில் எல்லா விபரங்களும் தெளிவாக எழுதப் பட்டிருந்தாலும், மடத்தில் நிர்வாகத்தை அப்போது இருக்கும் பரதேசி (தலைவர்) இறந்தவுடன் யார் அடுத்த பரதேசியாக வருவது என்பதும், அவரின் வரைமுறை எப்படி இருக்க வேண்டும் அல்லது யார் அவரை நியமிக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒன்றும் எழுதப்படவில்லை. ஆனாலும், அதைப்பற்றி ஒரு சிவில் வழக்கு OS No.20 of 1867 நடந்தது. அதில், மடத்தின் தலைவரே அடுத்த தலைவரை ஏற்பாடு செய்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று முடிவானது. அதில் ஜமின்தார் தலையிடத் தேவையில்லையா என்பதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

அடுத்த தலைவரை எப்படி தேர்தெடுப்பது என்றால், மடத்தின் தற்போதுள்ள தலைவர், தன் சீடனை அதற்கு தயார் செய்ய வேண்டும் அவனுக்கு பிரம்மமந்திரத்தை உபதேசித்து வர வேண்டும். பின்னர் சிவயோக நிஷ்டியையும் மற்ற யோகங்களையும் சொல்லிதந்து அதில் தெளிவு பெற்றவுடன், அடுத்த வாரிசை உருவாக்கி வைத்து விட வேண்டும்.

இப்படியாக குரு சாத்தப்பையருக்குப் பின்னர் இதுவரை இந்த மடத்துக்கு ஐந்து மடாதிபதிகள் வந்து விட்டார்கள்.

முதலாம் மடாதிபதி குரு சாத்தப்பையர்,

2-ம் மடாதிபதி காளிதாஸ் சாத்தைப்பையர்,

3-ம் மடாதிபதி முத்துநாத சாத்தப்பையர்,

4-ம் மடாதிபதி சித்தானந்த சாத்தப்பையர்,

5-ம் மடாதிபதி முத்துநாத சாத்தப்பையர்,

6-ம் மடாதிபதி கௌரியானந்த சாத்தப்பையர்.  

இதில் முதல் மூன்று மடாதிபதிகள் சந்தியாசிகள் ஆவார்கள். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாதவர்கள். நான்காம் மடாதிபதி திருமணம் ஆனவர் அவருக்கு ஒரு மனைவி இருந்தார். ஐந்தாம் மடாதிபதியும் திருமணம் ஆனவர், ஆனால் அவர் மனைவி இறந்து விட்டதால், சந்தியாசி ஆனவர். தற்போது உள்ள ஆறாம் மடாதிபதிக்கு இரண்டு மனைவிகள்.

மூன்றாம் மடாதிபதி (பரதேசி) இறந்தபோது, அவருக்கு அடுத்து யாரை நியமிக்க வேண்டும் என்று எந்த சீடனையும் தயார்படுத்தி வைக்காமல் இறந்து விட்டார். எனவே நான்காம் மடாதிபதியை, சிவகங்கை ஜமின்தாரே நியமித்து விட்டார்.

தற்போதுள்ள ஆறாம் மடாதிபதிக்கு இரண்டு மனைவிகள். இவர் மடத்தின் காரியங்களை ஒழுங்காகச் செய்து வரவில்லை. மடத்தின் வருமானங்களைக் கொண்டு தர்ம காரியங்களைச் செய்யவில்லை. வருமானத்தை அவரின் குடும்பத்துக்கு செலவு செய்கிறார். எனவே அவரை நீக்க வேண்டும் என்று தற்போதைய சிவகங்கை ஜமின்தார் பெரியசாமி மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்குப் போடுகிறார். முதலாம் ஜமின்தார் 1883-ல் இறந்து விடுகிறார். அவரின் மகன் தான் இந்த பெரியசாமி ஜமின்தார்.

மதுரை மாவட்ட கோர்ட் ஜமின்தாருக்கு சாதகமாக தீர்ப்பு கூறி விடுகிறது. மடாதிபதியை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பு. அதை எதிர்த்து மடாதிபதி ஐகோர்ட்டில் அப்பீல் செய்கிறார். இந்த அப்பீல் வழக்கை 1890-ல் சென்னை ஐகோர்ட் ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயர் விசாரித்து தீர்ப்பு கொடுக்கிறார். மதுரை மாவட்ட கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்கிறார்.

அப்பீல் வழக்கில்:

ஒரு பொது வழிபாட்டுக்கும், பொதுமக்களின் தர்மத்துக்கும் கொடுக்கப்பட்ட ஒரு மடம், கோயில் இவைகள் ஒரு பொது மடமே. If the institution were endowed and dedicated to any section of the public either as a place of worship, such as a temple, or a religious establishment where religious instruction is to be had like a public mutt. The Endowment Act XX of 1863 only replaced Regulation VII of 1817.

ஆனால், இந்த வழக்கில், ஜமின்தார், தன் குரு சாத்தைப்பையருக்காக ஏற்படுத்திய மடம் ஆகும். இங்கு அவர் வழி சீடர்களை மட்டுமே கொண்டு இயங்கும் மடம். சில தர்ம காரியங்களை பொதுமக்களுக்கு செய்திருந்தாலும், அவை இந்த மடத்தின் மூலம் செய்யப்படும் காரியங்கள் ஆகும். பொதுமக்கள் செலவு செய்து செய்யும் காரியங்கள் இல்லை. எனவே இந்த மடம் ஒரு தனியார் மடம் என்றே முடிவு செய்யப்பட்டது.

மடாதிபாதியை நீக்குவதற்கு ஜமின்தாருக்கு அதிகாரம் இருக்கிறதா?

முதல் ஜமின்தார் ஏற்படுத்தி வைத்த தர்ம சாசனத்தில் இதைப் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. மடாதிபதிக்கு அதன் சொத்துக்களை விற்க வாங்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அது மடத்துக்கு நன்மையாக இருக்கும்போது மட்டும் செய்யவேண்டியது என்று சொல்லப் பட்டுள்ளது.

சாத்தப்பையர் மடத்துக்காக, சிவகங்கை மருதவயல் நிலங்கள் மற்றும் வேறு பல நிலங்களும் இனாமாக மடத்தின் ஜீவிதத்துக்காக கொடுக்கப் பட்டுள்ளது. இந்த நிலங்கள் மடத்துக்கு ஆதரவாகக் கொடுக்கப் பட்டுள்ளதால், நிபந்தனை தானமாகவே கருத வேண்டும். மடத்துக்கு நிலங்களின் மேல் முழு உரிமை கிடையாது. The Grant was conditional and not absolute.

ஏற்கனவே இந்த மடம் சம்மந்தமாக, 1867-ல் ஒரு சிவில் வழக்கு நடந்தது. OS No.20 of 1867. அந்த வழக்கை சிவகங்கை ராணி கட்டம்ம நாச்சியார் போட்டார். மருதவயல் நிலங்களை லீஸூக்கு விட்ட வகையில் சொத்தினை ஜப்தி செய்த வழக்கான OS No.107 of 1865 என்ற வழக்கின் தொடர் வழக்கு அது. அது ஐகோர்ட் அப்பீல் வரை சென்றது. அங்கு, ஜமின்தார் இந்த நிலங்களின் விவகாரங்களில் தலையிட முடியாது என்றும், ஆனாலும், மடத்துக்கு வேறு மடாதிபதிகள் இல்லாதபோது தலையிடும் உரிமை உள்ளது என்றும் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கிங் வேறு பிரச்சனை உள்ளது. தற்போதுள்ள மடாதிபதி இரண்டு திருமணம் செய்து கொண்டவர் என்பதால், அவர் சந்நியாசியாக இருக்க முடியாது என்பதால் அவரை நீக்க வேண்டும் என்று ஜமின்தார் கோருகிறார்.

ஆனால், ஐந்தாம் மடாதிபதி திருமணம் ஆனவர். அவர் மனைவி இறந்து விட்டார். அப்படி இருக்கும்போது, அவர் சந்நியாசியாக வரவில்லையா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. ஆனால் இந்த மடாதிபதி, அவர் பதவி ஏற்கும்போது மனைவியுடன் இருக்கிறார், இரண்டு மனைவிகள் உண்டு.

இந்த மடம் 150 வருடமாக நடக்கிறது. முதல் மூன்று மடாதிபதிகள் சந்நியாசிகள். 4-வது மடாதிபதி திருமணம் ஆனவர். 4-வது மடாதிபதி திருமணம் ஆகி மனைவியை இழந்தவர். 6-வது மடாதிபதி இரண்டு மனைவிகைளக் கொண்டவர்.

தர்ம சாசனத்தில் மடாதிபதி சந்நியாசியாக (திருமணம் ஆகாதவராக) இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எனவே மடாதிபதி திருமணம் ஆகி இருக்கலாம் அல்லது சந்நியாசியாக இருக்கலாம். ஆனால் அவருக்கு அவரின் குருவிடமிருந்து பிரம்ம மந்திரம், சிவயாக நிஷ்டி போன்றவை சொல்லிக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்.

என்றாலும், இந்த மடாதிபதி நிர்வாகத்தை சரியாக நடத்தாமல், மடத்தின் நன்மைக்கு எதிரான செயல்களை செய்வதாலும், ஜமின்தார் இதில் தலையிட்டு வேறு மடாதிபதியை நியமிக்கலாம் என்று மதுரை மாவட்ட கோர்ட் கொடுத்த தீர்ப்பு சரிதான் என்று சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது.

**


Friday, June 19, 2020

கந்தலங்காரம்-100

சலம் (கோபம்) காணும் வேந்தர் தமக்கு அஞ்சார்;

யமன் சண்டைக்கும் அஞ்சார்;

துலங்கா (அசையாத) நரகக் குழி அணுகார்;

கலங்கார் புலிக்கும், கரடிக்கும், யானைக்கும்;

கந்தன் நன்நூல் அலங்காரம் நூற்றில் ஒரு கவி தான் கற்று அறிந்தவரே.

(கந்தரலங்காரம்-100)


கந்தரலங்காரத்தின் 100 பாடல்களில் ஒரு பாடலை அறிந்திருத்தால், மேற்சொன்ன எவற்றுக்கும் அஞ்சமாட்டார்.


சலம்காணும் வேந்தர் தமக்குமஞ் சார்யமன் சண்டைக்கஞ்சார்

துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்

கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்நூ

லலங்கார னூற்று ளொருகவி தான்கற் றறிந்தவரே.)