துர்வாச முனிவர்:
மகா கோபக்காரர். அந்த அளவுக்கு சிறந்த மகா ரிஷி.
இவர் அத்திரி என்பவருக்கும் அநசூயை என்பவளுக்கும் பிறந்த புத்திரன். இவரின் சகோதரர்
சோமதத்திரேயர்.
இவரின் கோபத்தை உலகில் உள்ள அனைவரும் அறிந்திருந்ததால், அதையே கோபத்துக்கு உதாரணமாகச் சொல்லி
வருகின்றனர்.
ஒருமுறை, தாம் நீட்டிய மாலையை,
இந்திரன் அவன் வைத்திருந்த யானைத் தோட்டியை நீட்டி வாங்கியதோடு,
அவன் அணிந்து கொள்ளாமல் அவனின் யானையின் மத்தகத்தில் போட்டுவிட்டான்.
இதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர் இந்திரனின் மொத்த செல்வமும் அழியவேண்டும் என்று
சபித்ததோடு அவை திருப்பாற்கடலுக்கு அடியில் போய் ஒழிந்து கொள்ளுமாறும் சபித்து விட்டார்.
No comments:
Post a Comment