Saturday, April 12, 2014

ஆதித்தியர்

ஆதித்தியர்

அதிதி என்ற பெண்ணுக்கும் கசியப பிரஜாபதிக்கும் மொத்தம் 12 புத்திரர்கள்.
1. தாதா
2. மித்திரன்
3. அரியமன்
4. இந்திரன்
5. வருணன்
6. அமிசுமந்தன்
7. பகன்
8. விசுவந்தன்
9. பூஷன்
10. சவிதா
11. துவஷ்டா
12. விஷ்ணு.

இந்த பன்னிரண்டு பேரும் பிரபஞ்ச சிருஷ்டியில் விருப்பம் இல்லாதவர்கள். எனவே பிரமாவினால் உத்திரவு இடப்பட்டு இவர்கள் ஒவ்வொரு மனு அந்தரத்திலும் (பிரபஞ்சம் உருவாகும்போதும்) பிறக்குமாறு சபிக்கப்பட்டவர்கள்.

ஆதித்தியர் என்றால் அதிதி புத்திரர்கள் என்றும் பொருள் உண்டு.
ரிக் வேதத்திலே, அதிதி என்ற பெண், எட்டு புத்திரரை ஈன்றாள் என்றும், அவர்களில் ஒருவனை மட்டும் புறந்தள்ளிவிட்டு, மற்ற ஏழு பேரையும் கூட்டிக் கொண்டு தேவர்களிடம் சென்றாள் என்றும், அவ்வாறு புறந்தள்ளப்பட்ட புத்திரனான 'விசுவதன்' என்னும் புத்திரனே ந்த பூலோகத்திற்கு ஒளி தருபவன் ஆனான் என்கிறது.

மற்ற ஏழுபேரும் இந்த பூவுலகிற்கு மேலே மேலே உள்ள மேல்-உலகங்களுக்கு கதிரவர்கள் ஆனார்கள் என்கிறது ரிக்வேதம்.

ஆதித்தியர் வேறு, சூரியன் வேறு.
ஆதித்தியர்  பிரபஞ்சத்தில் ஜோதிவடிவில் உள்ளவர்.  சூரியன் என்பவன் அக்கினி வடிவில் உள்ளவன்.

(ஆனாலும் சூரியனுக்கு, கதிரவன், ஆதித்தியன் என்ற பெயர்களும் உண்டு).

No comments:

Post a Comment