Friday, April 4, 2014

ஆனந்தத் தாண்டவம்

வியாக்கிரபாதர்

மத்தியந்தின முனிவரின் குமாரர் வியாக்கிரபாதர். இவரின் சிறுவயது பெயர் பாலமுனிவர். இவர் சிவ பூஜை செய்வதற்காக மலர்களை கொய்து வழிபாடு செய்து வருவது வழக்கம். பகல் பொழுதில் அந்த மலர்களில் வண்டுகள் வந்து உட்கார்ந்து தேன் அருந்துவதால் அந்த மலர்கள் எச்சில்படுத்த படுவதாகவும், அதைக் கொண்டு சிவபூஜை செய்ய முடியாது என்று எண்ணினார்.

எனவே இவர் சிவனிடம் வேண்டி, தனக்கு புலியின் கண்ணும், புலியின் காலும் வேண்டி அதைப் பெற்றுக் கொண்டாராம். இரவில் புலிக்கு கண் நன்றாகத் தெரியும். அதைக் கொண்டு இரவில் தில்லைவனம் சென்று அங்குள்ள பூக்களை பறித்து வந்து வைத்துக்கொண்டு, பகலெல்லாம் பூஜை செய்வாராம். இதனால்தான் இவருக்கு 'வியாக்கிரபாதர்' என்று பெயர் ஏற்பட்டதாம்.


இவர் சிதம்பரத்திலே கனகசபையிலே சிவபெருமான் செய்கின்ற ஆனந்தத் தாண்டவத்தை தன் கண்களாலேயே நேரில் பார்த்தவர்.


No comments:

Post a Comment