ஆசை மனங் கொடுத்து இதழ்கொடுத்தும்........
200 வருடங்களுக்கு முன் உள்ள கதை.
பூங்கோதை என்பவள் மதுரையிலே இருந்த
ஒரு தாசி.
இவள் சீதக்காதி என்னும் சோனகபிரபுவுக்கு காமக்கிழத்தியாம் (வைப்பாட்டி).
இவள் சார்ந்த இனம் இவளின் நடத்தையால் இவளின் சமூகத்திலிருந்து இவளைத் தள்ளி
வைத்தது.
இவளோ தமிழ்ப் புலமையில் மிகச் சிறந்தவள். கவி பாடுவதில் வல்லவள்.
(வைப்பாட்டியாக இருந்த தமிழ்ப் பெண் கவி இவள் ஒருத்தியாகத்தான் இருக்கும்!)
சீதக்காதியின் கொடைபற்றி யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிதில்லை. ‘செத்தும்
கொடுத்தான் சீதக்காதி’ என்ற பழமொழியே உள்ளது.
இவள், அவருடன் நட்புடன்(!) இருந்து, அதனால் கிடைத்த பெரும் செல்வத்தை, அதாவது காயற்பட்டினத்திலே அந்த சீதக்காதி கொடுத்த
பெரும் நிதியை எடுத்துக் கொண்டு, ஆசையாசையாய், தன்னந்தனியே தன் ஊருக்கு திரும்பி வருகிறாள்.
அவ்வாறு வரும் வழியிலே கள்வர் (திருடர்கள்) வந்து அவள் கொண்டுவந்த அனைத்து
செல்வங்களையும் கவர்ந்து கொண்டார்கள்.
இவளோ, தான் சேர்த்த செல்வமெல்லாம் பறிபோனதை எண்ணி, கதி கலங்கி, கதியற்றவளாகி, வருத்தப்பட்டு பாடிய பாடல் இதோ!!!
(எப்படியெல்லாம் நான் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த காசை, கள்வர்களிடம் பறி கொடுத்துத் தவிக்கின்றேன் பாருங்கள்! என்று புலம்புகிறாள். அவ்வளவு உருக்கமான கவிதை!!!)
“தினங்கொடுக்கும் கொடையானே
தென்காயற்பதியானே சீதக்காதி
இனம் கொடுத்த உடைமையல்ல
தாய் கொடுத்த உடைமையல்ல வெளியாளாசை
மனங் கொடுத்து இதழ்கொடுத்தும்
அபிமானம் தனைக் கொடுத்தும்
மருவிரண்டு தனம் கொடுத்த உடைமை யெல்லாம்
கள்வர் கையில் பறிகொடுத்துத் தவிக்கின்றேனே”.
No comments:
Post a Comment