கிருஷ்ணன் கட்டுண்ட உரல்
குபேரனுக்கு இரண்டு புத்திரர்கள். நளகூர்பன் மற்றும்
மணிக்கிரீவன். இவர்கள் அழகுக்கு இலக்கியமானவர்கள்.
இவ்விருவரும் கைலாசத்திற் நிர்வாணமாக ஜலகிரீடை செய்து கொண்டிருக்கையில் (குளிக்கும்போது) நாரதர் கண்டு, நீங்கள் நிர்வாணிகளாக
நீராடி நிற்கும் தோஷத்திற்காக மருதவிருக்ஷங்களாகக் கடவீர்கள் என்று சபித்தார்.
அவர்கள் அவ்வாறே பூமியில் நந்தன் வீட்டருகே இரண்டு மருத மரங்களாகப் பிறந்து
நின்றனர்.
கிருஷ்ணனின் தவறுக்கு தண்டனையாக, அவனின் தாயார் கிருஷ்ணனை
ஒரு உரலில் சேர்த்து வைத்து கயிறுகொண்டு கட்டிவிட்டாள். கிருஷ்ணன், தான் கட்டுண்ட
உரலை இழுத்துப் போகும்போது அந்த உரலால் இடறப் பெற்ற அந்த இரண்டு மருதமரங்கள் வேரோடு
சாய்ந்து இந்த இருவரும் சாபவிமோசனம் பெற்று தங்களின் பழைய வடிவம் பெற்று சாபம்
நீங்கினார்கள்.
No comments:
Post a Comment