தமிழ் அறிவோம்! பருவகாலம்
பருவ காலம்
ஆவணி தொடங்கி இரண்டிரண்டு
மாதமாக வருகிற ஆறுவகைப் பருவங்கள், கார்,
கூதிர், முன்பனி, பின்பனி,
இளவேனில், முதுவேனில்.
ஆவணி, புரட்டாசி = கார் காலம்.
ஐப்பசி, கார்த்திகை = கூதிர்காலம்.
மார்கழி, தை = முன்பனி காலம்.
மாசி, பங்குனி = பின்பனி காலம்.
சித்திரை, வைகாசி = இளவேனில் காலம்.
ஆனி, ஆடி = முதுவேனில் காலம்.
(பொதுவாக, பருவத்தின் மற்றொரு பெயர் = ஆனியம், ரிது
(இருது).
வருடத்தின் பெயர்
= வற்சரம், ஆண்டு, சமை, ஆயனம்.
பாதி ஆண்டின் பெயர்
= அயனம்.
ஊழிகாலத்தின் பெயர்
= யுகமுடிவு, மடங்கல்.
வாழ்நாளின் பெயர்
= ஆயுள்.
No comments:
Post a Comment