துஞ்சலுந் துஞ்சலிலாத போழ்தினும்.....
பஞ்சாக்ஷர என்னும் ஐந்தெழுத்தே துணை! (பஞ்சாட்சரம்)
திருஞான சம்மந்தருக்கு
அவரின் இளம் வயதில் உபநயனம் செய்ய பிராமணர்கள் ஏற்பாடு செய்தனர். அவருக்கு அதில் விருப்பம்
இல்லையாம். ஆனாலும் உலகப் பழக்கம் என்பதால் சம்மதிக்கிறார். அப்போது அவர் பல வேதங்களைப்
பாடினாராம்.
ஆனாலும் சகல மந்திரங்களுக்கும்
வேதங்களுக்கும் வித்தானது (அடிப்படையானது) "பஞ்சாக்ஷர" என்னும் ஐந்தெழுத்து
மந்திரமே என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி உள்ளார்.
அப்போதுதான் இந்த
"துஞ்சலுந் துஞ்சலிலாத போழ்தினும்.........." என்ற பஞ்சாக்ஷர திருப்பதிகத்தைப் பாடினார்.
"துஞ்சலுந் துஞ்சலி
லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின்
நாடொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த
வந்தகூற்(று)
அஞ்சவு தைத்தன வஞ்செ
ழுத்துமே."
துஞ்சலும் துஞ்சலிலாத
போழ்தினும் = தூக்கத்திலும், தூக்கமில்லாத நினைவு
நிலையிலும்.
நெஞ்சகம் நைந்து நினைமின்
= மனம் கசிந்து உருகி நினைத்து வேண்டி.
வஞ்சகம் அற்று அடி
வாழ்த்த = உண்மையான அன்போடு சிவனை துதித்தால்
வந்த கூற்று = வந்த
எமனும்
அஞ்சவு தைத்தன = பயந்து
நடுங்குவான்.
அஞ்செழுத்துமே = பஞ்சாக்ஷர
என்னும் ஐந்து எழுத்தான மந்திரத்தைச் சொன்னாலே போதும்., வேறு மந்திரங்கள் எதுவும் தேவையில்லை.
"தும்ம லிருமல்
தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த
போழ்தினும்
இம்மை வினையடர்த்
தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை
அஞ்செ ழுத்துமே."
தும்மல், இருமல் தொடர்ந்து வந்தபோதும்,
வெம்மை என்னும் கொடுமையான
நரகம் வந்த போதும்,
இம்மை என்னும் இப்பிறவியினால்
ஏற்படும் வினைகள் சூழ்ந்தாலும்,
அம்மை என்னும் மறுபிறவியிலும்,
இவை எல்லாப் பிறவியிலுமே
துணையாக இருப்பது இந்த ஐந்தெழுத்தான பஞ்சாக்ஷர என்னும் மந்திரமே!
No comments:
Post a Comment