கடவுளுக்கு வேஷம் தேவையில்லை
அகஸ்தியர் சிவபக்தர். அவர் சிவபக்திக்குறிய
வழிபாட்டு முறைப்படி தன் உடலில் திருநீறு அணிந்து பொதிகைக்கு சென்றார். அங்கு உள்ள
விஷ்ணுதலத்துக்கு சென்றார். இவர் சிவபக்தர் என அறிந்த அங்குள்ள வைஷ்ணவர்கள் இவரை
விரட்டி அடித்துவிட்டனர். இவரோ வெளியே சென்று, விஷ்ணு வழிபாட்டு முறைப்படி வேறு
ஒரு நபர்போல விஷ்ணுதலத்துக்கு வர, அவர்கள் அனுமதித்தனர்.
உள்ளே சென்ற அகஸ்தியர், தனது
திருக்கரத்தாலேயே விஷ்ணுவை தழுவி, அவரைக் குழைத்து, சிவனாக ஆக்கி, சிவனை
வழிபட்டுவிட்டு வெளியே வந்தாராம். விஷ்ணு, சிவனாக மாறியதைக் கண்ட அங்கிருந்த
வைஷ்ணவர்கள் தங்கள் கர்வம் அடங்கினராம். இந்த தலம் பாண்டிநாட்டிலுள்ள ஒரு
சிவஸ்தலமான திருக்குற்றாலம். இந்த தலம் சம்மந்தரால் பாடல் பெற்ற தலமும்கூட.
கடவுளுக்கு வேஷம் தேவையில்லைபோலும். மனம்நிறைந்த பக்தியே
அவரை ஈர்க்கும் ஈர்ப்புவிசை.
No comments:
Post a Comment