தமிழ் அறிவோம் – மனிதரின் பெயர்கள்
தூதர் பெயர் = வித்தகர், வினை உரைப்போர், வழி உரைப்போர், பண்புரைப்போர்.
அடிமையின் பெயர்
= தொத்து, கிணகர், தாசர்,
தொழும்பு, தொறு, விருத்தி,
தொண்டு, சேடர், ஆள்.
தோழன் பெயர் = சிலதன், நண்பன், பாங்கன், சேடன்,
துணைவன், எலுவன்.
தோழி பெயர் = சிலதி,சகி, பாங்கி, சேடி,
இகுளை.
குருடன் பெயர் = அந்தகன், சிதடன்.
கூனின் பெயர் = கோணல்.
செவிட்டின் பெயர்
= வதிர்.
முடத்தின் பெயர்
= பங்கு, குணி.
ஊமையின் பெயர் = மூகை, மூங்கை.
அலியின் பெயர் = பெண்டகன், பேடி, நபுஞ்சகன், சண்டன்.
பெண்ணின் பெயர் =
அரிவை, அங்கனை, மடந்தை,
ஆடவள், ஆட்டி, மாயோன்,
கரிகுழல், மகடூஉ, காந்தை,
சுந்தரி, வனிதை, மாது,
தெரிவை, மானினி, நல்லாள்,
சிறுமி, தையல், நாரி,
பிரியை, காரிகை, அணங்கு,
பிணா, பெண்டு, பேதை.
ஆணின் பெயர் = ஆடவன், மைந்தன், காளை, ஆடூஉ
, மகன், புமான், குமரன்.
பெண்ணின் பருவங்கள்
= பேதை, பெதும்பை, மங்கை,
மடந்தை, அரிவை, தெரிவை,
பேரிளம்பெண்.
கைம்மை பெற்றோன்
(Widower)பெயர் =கோளகன்.
அமங்கலையின் பெயர் = கைம்மை, கைனி, கலன்கழிமடந்தை, விதவை.
மலடியின் பெய்ர = மைம்மை, வந்தி.
வேசையின் பெயர் = பரத்தை, கணிகை, சூளை, பயனிலாள், வரைவின்மாது, பொருட்பெண்டு, விலைமகள்.
No comments:
Post a Comment