பிரபஞ்சம் தோன்றலும் ஒடுங்கலும்: (The Birth of the Universe)
God particle:
It is a nickname of a sub-atomic particle (called
Higgs boson).
Protons and Neutrons have mass.
Photons don't have mass.
Then who gives mass to the matter.
It is believed that God Particle (Higgs Boson) gives
mass to matter.
There are certain elementary particles even smaller
than protons and neutrons. That particle is called 'Higgs boson' or God
particle.
தேவர்கள் சேர்ந்து அமிர்தமதனம் கடைந்ததாக சொல்கிறார்களே!
முதலில் இந்த பிரபஞ்சம் ஒடுங்கி ஒடுக்க நிலையில் ஒரு புள்ளியில் இருந்தது. அது
விரிவடைந்தபோது, சுழற்சியான (grinding) சப்தத்திலிருந்த (sound) அணுக்கள் ஒன்று, இரண்டாகி, இரண்டு மூன்றாகி, பலவாகி வெடித்துச் சிதறியதுபோல
வெளிக்கிளம்பியதாம்.
இந்த நிகழ்வைத்தான் அமிர்தமதனம் கடைதல் என முனிவர்கள் சொல்லியது.
அணுக்கள் ஒன்றையொன்று பற்றிக் கொண்டு இறுக்கமாகி பொருளாக உருவானாலும், அவைகள்
அனைத்தையும் ஒருசேர அணைக்கும் சக்தி எது? அந்த இறை சக்தியை 'கடவுளின் துகள்' (God particle or Higgs boson) என்று தற்போதைய விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
அணுக்கள் வெடித்துச் சிதறியபோது இந்த சக்தியானது ஏழு விநாடிக்குள் ஏற்பட்டதாக
சொல்லியுள்ளார்கள்.
தற்போதைய உலக விஞ்ஞானிகள் எல்லோரும் சேர்ந்து அப்படி ஒரு "கடவுளின்
துகள்கள்" உள்ளனவா என்றும்; அவைகள் அந்தச் சிறு விநாடிக்குள்
அணுக்களை இறுக கட்டிக் கொள்ளுமா என்றும் ஆராய்வதற்காக, ஸ்விட்சர்லாந்தில் Collider என்னும்
வெடிப்பு பரிசோதனைக்காக ஏற்படுத்தி பூமிக்கடியில் நிகழ்த்தியும் உள்ளார்கள்
(இப்போது வேறு காரணங்களுக்காக அது நிறுத்தப்பட்டுள்ளதாம்). இது இறைவனைப்பற்றி
அறிவதில் ஒரு படிக்கட்டு என்கிறார்கள்.
ஆனால் நமது இந்திய முனிவர்கள் இதை ஏற்கனவே அறிந்து, வேறு மொழியில் சொல்லி
உள்ளதால், நாம் அதை முடநம்பிக்கை என கைவிட்டு
விட்டோம்.
அதைப்பற்றிய தெளிவு இப்போதுள்ள இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது.
அமிர்தமதனம்: (இந்த பிரபஞ்சம் தோன்றிய காட்சி):
Forming of Higgs Boson
இதன் பொருள் ‘அமிர்தம் கடைதல்’ எனப்படும். கிருதயுகத்திலே, தேவர்களும்
அசுரர்களும் கூடி மந்தரத்தை மத்தாகவும், வாசுகியை தாம்பாகவும் (கயிறாகவும்) கொண்டு
திருப்பாற்கடலை (இந்த
பிரபஞ்சத்தை) கடைந்தபோது, விஷம், லக்ஷ்மி,
சந்திரன், தந்வந்திரி, உச்சைசிரவம், கவுஸ்துபம், பாரிஜாதம், ஐராவதம், கற்பகதரு,
காமதேனு, அமிர்தம் இவைகள் திருப்பாற்கடலிலிருந்து எழுந்தன.
மூலபிரகிருதி ஆகாய (Ether) உருவமாகிக் கிடந்து, பின்னர்
தடித்து வாயு (air) உருவமாகிக் கிடந்து, பின்னர்
தடித்து வைசுவாநரம் என்னும் அக்கினி (fire) உருவமாய்க் கிடந்து, பரிணாம ரூப பிரமாண்டத்தை கண்ணுக்கு
விஷயமாகிய தோற்றப் பிரபஞ்சமெல்லாம் (இப்போது நாம் கண்ணால் காணக்கூடிய இந்த
உருவமுள்ள பிரபஞ்சம்) உண்டானது இந்த அமிர்தத்தினாலேயேதான்.
இந்த உலகம் காரியபட்ட முறையையே
(உருவான விதமே) அமிர்தமென பௌராணிகர்கள் குறிப்புரையால் கூறிப் போயுள்ளார்கள்.
கிருதயுகம் என்பதன் பொருள் பிரமாண்டம் சிருஷ்டி செய்யப்பட்ட யுகம் என்பது.
மந்தரமென்பது ஆகாய மத்தியிலேயே கிடந்து தான் சுழலும்போது தன்சந்நிதிப் பட்ட
சர்வாண்டங்களையும் தன்னுடே சுழலச் செய்வதாகிய ஒரு ‘சக்தியை’ அது கலங்காநிலையானதால்
மலை என்று சொல்லப்பட்டது.
வாசுகி என்றது அண்டங்களையெல்லாம் தத்தம் நிலையில் நிறுத்துவதாகிய ஒரு சக்தியே.
இவ்விரண்டு சக்திகளும் ஒன்று தன்பக்கம் கவர்வதும் மற்றது தனது நிலையே நாடுவதுமாக
ஒன்றுக்கொண்டு தன் முண்மாறு கொண்டவை. (Attracting and Repealing forces).
தேவர், அசுரர் எனக் கூறப்பட்டவை, முறையே ரசோகுண பிரவிருத்தி, தமோகுண
பிரவிருத்தி. (good and bad) மேலே கூறப்பட்ட இரு
சக்திகளையும், இந்த பிரவிருத்திகளுடன் எழுப்பி ஆட்டிய செய்தியே கடைதல் எனப்பட்டது.
கடைதலால் ஏற்பட்ட கொடிய விஷ உஷ்ணமே விஷமெனப்பட்டது.
லஷ்மி என்றது இளமை அழகு முதலியவற்றை தரும் ஆற்றல். உச்சைசிரவம், ஐராவதம்
என்பது முறையே குதிரை வடிவும் யானை வடிவும் உடையனவாய் உள்ள நக்ஷத்திர
மண்டலத்துக்கு அப்பாலுள்ள இருதாரகாகணம்.
கவுஸ்துபம் என்றது சூரியனை. சூரியனுக்கு அண்டயோனி என்றும், சந்திரனுக்கு
அப்ஜன் என்றும் பெயருண்டானது எதனால் என்றால், இந்த
திருப்பாற்கடலிடைப் பிறந்தமையை பற்றித்தான்.
ஆக, இவற்றால், இந்த அமிர்தமதன விஷயம் சிருஷ்டி கருமத்தை (The Birth of the Universe) குறித்ததே என்பது உறுதியாக நிச்சயிக்கப்படும்.
இன்னொறு ஆச்சரியம் என்னவென்றால், இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட இந்தப்
பிரபஞ்சமானது, அதன் காலக்கெடு முடிந்தவுடன் இதேபோல அதன் ஈர்ப்புசக்தியை ஒடுக்கிக்
கொண்டு உள்வாங்கி ஒரு புள்ளியில் ஒடுங்கும். பின்னர் ஒரு காலத்தில் அது மீண்டும்
மேலே சொன்னபடி உருவாகும்.
நையாயிகர்’
(நையாயிக மதம்) கௌதமணாத மதவாதிகள்
‘நையாயிகர்’ எனப்படுவர். இவர்கள் சித்தும் சடமும் ஆகிய இவ்விரண்டுமே நித்தியபொருள்கள் (Permanent நிரந்தரமானவைகள், அழியாதவைகள்) என்பவர்கள்.
இந்த பிரபஞ்சம், ஏக அணுவாகி (one particle), பின் துவியணுவாய் (two particles), பின் திரியணுவாய் (three particles),
வடிவமுடைய பொருளாகி, பின்னர் ஒன்றில் ஒடுங்கிவிடும்.
சடமாகிய
இவ்வுலகம் பீஜத்தினின்றும் தோற்றுவிக்கப்பட்டது என்றும், தோற்றுவிப்பது
சித்துப்பொருள் என்றும், தோன்றும்போது பீஜம் ஏக அணுவாய் (ஒன்றாய்), பின்னர்
துவியணுவாய் (இரண்டாய்), பின்னர் திரியணுவாய் (மூன்றாய்), வடிவமுடைய பொருளாகும்
என்றும், ஒடுங்கும்போது அவ்வாறே ஒடுங்கிச்
சென்று பீஜமாய் நிற்கும் என்றும், அந்த நிலையில் அது நித்தியமென்றும் (permanent), வடிவுடையதாய் நிற்கும் நிலையில் அது அழியும் தன்மையது என்றும், சித்தின்றி
சடம் மட்டும் காரியப்படாதென்றும் (செயல்படதென்றும்), ஆன்மகோடிகள் (உயிர்களில் உள்ள
ஆன்மாக்கள்) எல்லாம் ஜகத்காரணமாகிய (இந்த பிரபஞ்சத்துக்காக ஏற்படுத்தப்பட்ட)
சித்துப் பொருளின் அம்சங்கள்தான் என்றும், அம்சங்கள் என்பதால் சிற்றறிவும் சிறு
தொழிலும் உடையனவென்றும், ஜகத்காரணமாகிய சித்து முழுமுதல் ஆனதால் முற்றறிவும்
முற்றுத் தொழிலும் உடையதென்றும், ஆன்மாக்கள் சரீரத்தோடு (உடம்போடு)
கூடியிருக்கும்போது அஞ்ஞானம் உடையதாய் இருக்கும் என்றும், இடையறாத முயற்சியினால்
ஞானத்தை அடையும்போது அந்த ஆன்மாக்கள் முழுமுதலோடு (பேரான்மா என்கிற இறைநிலையில்)
சேர்ந்து பேராநந்தத்தை அநுபவிக்கும் என்றும் கூறுவர் இந்த நேயாயிக சமயத்தை
சேர்ந்தவர்கள். இதுதான் அவர்களின் மதத்தின் கொள்கையும்கூட.
No comments:
Post a Comment