தமிழ் அறிவோம்!
மழை
மழையின் பெயர்கள்
= துளி, திவலை, தூவல்,
சீகரம், தூறல், மாரி,
வருடம், உறை, ஆலி,
வானம்.
பெருமழையின் பெயர்
= ஆசாரம்.
விடா மழையின் பெயர்
= பனித்தல், சோனை.
மழைத் துளியின் பெயர்
= திவலை, தூவல், சிதர்,
சீகரம், ஆலி, தளி,
உறை.
ஆலங்கட்டி மழையின்
பெயர் = ஆலி, கரகம், கனோபலம்.
இடியின் பெயர் = வெடி, ஒலி, அசனி, செல்,
விண்ணேறு, மடங்கல், உரும்,
அனலேறு.
மின்னல் என்னும் மின்னின்
பெயர் = வித்துத்து, தடித்து, சம்பை,
சபலை, சஞ்சலை, மின்னல்,
கனருசி.
பனியின் பெயர் = இமம், துகினம்.
வானவில்லின் பெயர்
= இந்திரதனு.
மேகத்தின் பெயர்
= மங்குல், சீதம், பயோதரம்,
தாராதரம், குயின், மழை,
எழிலி, மஞ்சு, கொண்டல்,
சீமூதம், கொண்மூ, முகில்,
விண், விசும்பு, மால்,
சலதரம், செல், புயல்,
கனம், கந்தரம், கார்,
மை, மாரி.
No comments:
Post a Comment