புஷ்பக விமானம்
இந்த புஷ்பக விமானத்தை குபேரன் வைத்திருந்தானாம். குபேரன், பிரம்மாவை நோக்கி
நீண்ட தவம் செய்து அதனால் இந்த விமானத்தைப் பெற்றானாம். இந்த புஷ்பக விமானமானது
விரும்பிய இடத்துக்கு கொண்டு சென்று சேர்க்கும் இயல்புடையது. இப்போதுள்ள
விமானங்களைப் போலவே.
ஆனால் குபேரனால் இந்த விமானத்தை வைத்து அனுபவிக்க முடியவில்லை. திடீரென்று,
இராவணன் குபேரனுடன் போரிட்டு இந்த விமானத்தை குபேரனிடமிருந்து அபகரித்துச் சென்று
விட்டான்.
இந்த விமானத்தைக் கொண்டுதான் இராவணன் சீதையைக் கடத்திச் சென்றான்.
பின்னர் இராவண யுத்தம் முடிந்தவுடன் இராமர் இந்த விமானத்தை எடுத்துக் கொண்டு
வந்து விட்டார். அந்த விமானத்தை இராமரின் பேரனுக்கு கொடுத்து விட்டதாக
சொல்கிறார்கள். இப்போது யாரிடம் உள்ளதோ?
No comments:
Post a Comment