போதைக்காரனா, சுட்டுத்தள்ளு!
செசன்யா நாட்டின் தலைவர் “ரம்ஜான்
காட்டிரோவ்”; இது ரஷ்ய கூட்டாச்சியில் உள்ள நாடு; இங்குள்ள மக்கள் மிக அதிகமாக போதைப்
பொருளுக்கு அடிமையாகி விட்டார்களாம்! நடுரோட்டில்
மிரட்டல் விடுக்கிறார்கள்; போதையுடனேயே கார்களை ஓட்டிச் சென்று மோதுகிறார்கள்; நிறைய
உயிர் இழப்பு ஏற்படுகிறது; போதையுடன் வண்டி ஓட்டினால், டிரைவர் லைசென்ஸ் கேன்சல் ஆகும்
எனச் சட்டமும் உள்ளது; அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லையாம்; எனவே கார்களை பறிமுதல்
செய்தும் பார்த்து விட்டனர்; அதற்கும் பலன் இல்லையாம்!
இங்கு மதுவிற்பனையை காலை 8 மணி
முதல் 10 மணி வரை மட்டும் வைத்துப் பார்த்தனர்; மதுவுக்கு கட்டுப்பாடா என்று போதை மருந்துகளை
வாங்கி உபயோகிக்க ஆரம்பித்து விட்டனராம்! இது கிடைக்கவில்லை என்றால் அது!
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்
செசன்யா தலைவர்; பொறுமைக்கு ஒரு எல்லை உண்டல்லவா? இனி யாராவது போதை மருந்து உட்கொண்டு
திரிந்தால் துப்பாக்கியால் சுட்டுவிடும்படி போலீஸூக்கு உத்தரவு போட்டுவிட்டார்;
போதைக்கு எதிரான போர் என்கிறார்!
ஒரு டஜன் பக்கத்து நாடுகளில் இருந்து போதை பொருள்கள் உள்ளே வருகிறதாம்!
ஒரு கெட்டதை ஒழிக்க சட்டம் துப்பாக்கியை
எடுக்கச் சொல்லிவிட்டது தவறில்லை என்கிறார் அந்த நாட்டின் தலைவர்.
**
No comments:
Post a Comment