கந்தரலங்காரம்-3
தேர் அணி இட்டுப் புரம் எரித்தான் மகன் செங்கையில் வேல்
கூர் அணி இட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து அரக்கர்
நேர் அணி இட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேர் அணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே!
(தேர் அணி என்னும் தேர்ப் படைகளைக் கொண்டு புரம் என்னும் முப்புரத்தையும் எரித்தவனான
சிவபெருமானின் மகனான முருகனின் சிவந்த கையில் உள்ள வேலாயுதத்தின் கூரிய நுனியானது,
சீறிச் சென்று, கிரௌஞ்சம் என்னும் பெரும் மலையை, அணு அணுவாக தூள் தூளாக்கி
பொடியாக்கி தகர்த்து, அரக்கர்கள் நேராக அணி வகுத்து நின்ற அவர்களின் சேனையை
நெளித்தது; அதனால் சூரனின் பெரிய படை அழிந்தது; அதனால் தேவேந்திர லோகமே பிழைத்தது!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-3)
**
No comments:
Post a Comment