கந்தரலங்காரம் (காப்பு)
அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வடவருகில் சென்று கண்டு கொண்டேன்: வருவார் தலையில்
தட பட எனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கைக்
கட தட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றிணையே!
(அடல் என்னும் வலிமை பொருந்திய அருணைத் திருக்கோபுரம் என்னும் திருவண்ணாமலைக்
கோபுரத்திலே, அந்த வாயிலுக்கு வடக்கில் சென்று கண்டு கொண்டேன்; அங்கு வருபவர்கள்
தலையில் தட பட என்று ஓசை எழும்படி தலையில் குட்டிக் கொண்டு, சர்க்கரையை வாயில்
மொக்கிக் கொண்டு, அதன் கையோடு, கடதடக் கும்பக் களிறு என்னும் மதம் பொருந்திய அகன்ற
மத்தகத்தை உடைய யானை முகக் கடவுளான விநாயகருக்கு
இளையவரான யானை போன்ற சுப்பிரமணியக்
கடவுளை கண்டு கொண்டேன்.)
(அருணகிரிநாதர் அருளியது)
**
No comments:
Post a Comment