கந்தரலங்காரம்-1
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத வென்னைப் பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா! செஞ்சடா
அடவி மேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே!
(புண்ணியம் என்னும் பேரும், தவமும் சிறிதும் இல்லாத என்னை, பிரபஞ்சம் என்னும்
இந்த சேறு நிறைந்த உலகிலிருந்து விலக வழி விட்டவனே! செம்மையான (சிவந்த) சடையை
உடைய, காடு போல் உள்ள சடையில் கங்கையையும், பாம்பையும், கொன்றை மலரையும், தும்பை
பூவையும், சந்திரனின் பிறையையும், அணிந்த பெருமானான சிவபெருமானின் குமாரனான
கிருபாகரனே (முருகனே) உன்னை வணங்குகிறேன்!
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-1)
**
No comments:
Post a Comment