Hurricane ஹரிகேன் என்பது, ஒரு மணிக்கு சுமார் 74 கி.மீ. (119
கி.மீ) வேகத்துக்கும் அதிகமாக புயல் காற்று வீசினால் அதை ஹரிகேன் புயல் என்பர். இந்த
புயல் வேகத்தை 64 நாட் (knots) என்றும்
சொல்கிறார்கள். ஹரிகேன் என்பது ஸ்பானிஷ் மொழி வார்த்தையாம். ‘Hurricane’ என்பது “god of the storm”.
இப்போது ஒரு ஹரிகேன்
புயல் ஜமைக்கா நாட்டில் உருவாகி உள்ளது. கியூபா நாட்டுக்குத் தெற்கே ஜமைக்கா நாடு உள்ளது.
இது தீவு நாடு. அதன் தலைநகரம் கிங்ஸ்டன் (Kingston).
இந்த நாடு கரீபியன் (Caribbean) கடலில் உள்ள தீவு நாடு. ஸ்பெயின் நாட்டின் பிடியில் இருந்த நாடு; அப்போது, ஆப்பிரிக்காவில்
இருந்து அடிமைகளை கொண்டு வந்தனர். பின்னர் வந்த பிரிட்டீஸ் ஆட்சியில், சைனாக்காரர்களையும்,
இந்தியர்களையும் கொண்டு வந்து இங்கு விட்டுள்ளனர்; இப்படி பல மொழி பேசும் மக்கள்
வந்து சேர்ந்திருந்தாலும், இங்கு ஆங்கிலம்தான் பேசுகிறார்களாம். இப்படி
வேற்றுமொழிக்காரர்கள், ஆங்கில மொழி பேசும் இயல்பை ‘ஆங்கிலோ-போன்’ (Anglophone) நாடு என்பர்;
கரீபியன் கடல் என்பது
இந்த ஜமைக்கா நாட்டுக்கும் தென்-அமெரிக்க நாட்டுக்கும் நடுவில் உள்ள கடல்; இந்தக்
கடலில்தான் இப்போது புதிய ஹரிகேன் புயல் உருவாகி உள்ளது; எப்போதும் இப்படிப்பட்ட
புயலுக்கு ஒரு பெயர் வைத்துக் கொள்வார்கள்; இது ஒரு அடையாளத்துக்குத்தான்! அப்படி
ஒரு புயல் இப்போது கரீபியன் கடலில் உருவாகி உள்ளது; அது ஜமைக்கா நாட்டில் நுழையும்
அபாயமும் உள்ளதாம்; அந்த புயலுக்கு பெயர் வைத்துள்ளார்கள்; அதன் பெயர்
ஹரிகேன்-மாத்யூ (Hurricane Mathew);
ஏற்கனவே மிக மோசமான ஒரு
ஹரிகேன்-புயல் இந்த பகுதியில் வந்துள்ளதாம்; அது அட்லாண்டிக் கடலில் வந்ததாம்;
அதற்குப் பெயர் ஹரிகேன்-பெலிக்ஸ் (Hurricane
Felix); இது 2007-ல்
வந்துள்ளது;
இந்த மாத்யூ புயல்,
மணிக்கு சுமார் 160 மைல் வேகத்தில் (260 கி.மீ.) அடிக்குமாம்; 1988-ல் ஜமைக்காவில்
ஒரு பெரும் புயல் வந்ததாம்; அதற்கு ஹரிகேன்-கில்பர்ட் என்று பெயர் வைத்துள்ளனர்;
அது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி விட்டு போனதாம்!
இந்த கில்பர்ட் புயலை
விட, இப்போது வரும் மாத்யூ புயல் மிக அதிக வேகத்தில் இருக்கும் என யு.எஸ்.நேஷனல் ஹரிகேன்
சென்டர் என்னும் மியாமியில் உள்ள அமைப்பு தெரிவித்து உள்ளதாம்! மேத்யூ புயல் மிக
அதிக மழையைக் கொடுக்குமாம்! 15 அங்குலம் (செ.மீ.) குறைந்த அளவு முதல், மிக அதிக
அளவாக 25 அங்குலம் (63 செ.மீ.) வரை மழை பெய்யும் வாய்ப்பு இருக்குமாம்!
**
No comments:
Post a Comment