திருவாரூர் மூலஸ்தானம் (தியாகராயப் பெருமான்)
“திருவாரூர் பிறந்தவர்களுக்கு எல்லாம் நான் அடியேன்” என்று சுந்தரர் உறுதி எடுத்து
துதிக்கப்பட்ட தலமே இந்த திருவாரூர் மூலஸ்தானம்;
இந்திரனிடமிருந்து முசுகுந்த சக்கரவர்த்தி இந்த தியாகராயப் பெருமானைப் பெற்று
ஸ்தாபித்த தலமாம்! சப்த ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாம்!
இந்த திருவாரூர் என்னும் நகர், சோழ மன்னர்களுக்கு வெகுகாலம் ராஜதானியாக
(தலைநகராக) இருந்து வந்ததாம்; மனுநீதி சோழன் அரசு செய்யும் காலத்தில், தன் மகன்
தேரில் செல்லும்போது ஒரு பசுவின் கன்றை, அவனின் தேர் சக்கரம் தெரியாமல் ஏற்றிக் கொன்றதால்,
அவனை அதே தேர்காலில் இட்டுக் கொன்று, அந்தப் பசுவின் துயர் தீர்த்தவன்
மனுநீதிசோழன்;
அவனின் நேர்மைக்கண்டு இறந்த அந்த பசுவின் கன்றையும், சோழனின் மகனையும்
உயிர்பித்தார் சிவன்; அத்தகைய கீர்த்தி பெற்ற தலமே திருவாரூர் மூலஸ்தானம்;
இங்கு குடிகொண்டிருக்கும் சுவாமியின் பெயர்: சுவாமி வன்மீகநாதர்: அம்மையின்
பெயர்: அல்லியங்கோதை;
No comments:
Post a Comment