கந்தரலங்காரம்-6
பெரும் பைம் புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள
அரும்பும் தனிப் பரமானந்தம் தித்தித்து அறிந்த அன்றே
கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே!
(பெரும் பைம் புனம் என்னும் பரந்த பச்சை காட்டில், சிற்றேனல் என்னும் சிறு தினைக்
கதிர்களைக் காக்கின்ற பேதை வள்ளியின் கொங்கைகளை விரும்பும் குமரக் கடவுளே! மெய்
அன்பினால், மெல்ல மெல்ல உன்னை நினைக்க, உன் தோற்றம் அரும்பி, எனக்குப் பேரின்பம்
தோன்றும்! அப்போது, எனக்கு கரும்பும் துவர்க்கும், செந்நிறந் தேனும் புளித்துக்
கசக்குமே!
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-6)
**
No comments:
Post a Comment