கந்தரலங்காரம்-8
ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து உச்சியின் மேல்
அளியில் விளைந்த ஒர் ஆனந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறுந் தனியைத்
தெளிய விளம்பியவா, முகம் ஆறுடைத் தேசிகனே!
(ஒளி என்னும் பரஞ்சோதியில் உண்டாகிய உயர்வான ஞான மலையின் உச்சியில், உன்
அருளினால் உண்டான ஒப்பற்ற ஆனந்தத் தேன் என்னும் பேரின்பத்தை, அநாதி என்னும் சுத்த
வெளியான சிவனிடத்தில், வெறும் பாழை என்னும் சுத்தப் பிரணவத்தை, தெளிவாக விளக்கிச்
சொல்லிய ஆறு முகங்கள் கொண்ட தேசிகன் என்னும் என் குருமூர்த்தியே கந்தா!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-8)
**
No comments:
Post a Comment