கந்தரலங்காரம்-7
சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள் தவிக்கும் என் தன்
உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய், அவுணர் உரத்து உதிரக்
குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து வெற்றிக்
களத்தில் செருக்கிக் கழுது ஆட வேல்
தொட்ட காவலனே!
(சளம் என்னும் இந்த மாயப் பொய் வாழ்வில் சிக்கிக் கொண்டு, அசட்டுக் கிரியை
என்னும் இந்த இழிவான தொழிலினுள்ளே கிடந்து, தவிக்கும் எனது உள்ளத்தில், ப்ரமம் என்னும்
மயக்கத்தை நீங்குவாய் கந்தா! அவுணர் என்னும் அரக்கர்களின் மார்பிலிருந்து சொரியும்
ரத்தக் குளத்தில் குதித்து, அதில் குளித்து, அதனால் துள்ளி ஆனந்தக் கூத்தாடி,
அதைக் குடித்து, அந்த வெற்றிக் களத்தில் செருக்கு கொண்டு, கழுது என்னும் பேய்கள்
ஆடும்படி, உன் வேலைச் செலுத்தி என்னைக் காப்பாற்று கந்தா!)
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம் பாடல்-7)
**
No comments:
Post a Comment