கந்தரலங்காரம்-9
தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா மொழித் தெய்வவள்ளி
கோன் அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறவற்றோ
வான் அன்று, கால் அன்று, தீ அன்று, நீ அன்று, மண்ணும் அன்று,
தான் அன்று, நான் அன்று, அசரீரி அன்று, சரீரி அன்றே!
(தேன் என்றும், பாகு என்றும் உவமை சொல்ல முடியாத இனிய சொல்லை உடைய தெய்வ
கன்னியாகிய வள்ளியின் பதி (கணவர்) ஆகிய முருகா, நீ எனக்கு அந்நாளில் உபதேசம் செய்தது என்னவென்று என்னால் கூறமுடியவில்லையே! "அது வான் என்னும் வானமும் இல்லை, கால்
என்னும் காற்றும் இல்லை, தீ என்னும் நெருப்பும் இல்லை, நீர் என்னும் சலமும் இல்லை,
மண் என்னும் பூமியும் இல்லை, தான் என்னும் நாம் இல்லை, நான் என்னும் நானும் இல்லை,
அசரீரி என்னும் சரீரம் இல்லாத பொருள் இல்லை, சரீரி என்னும் (தொடும் பொருள்)
இல்லையே!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-9)
**
No comments:
Post a Comment