Noscitur a Sociis
நோசிட்டர் சோசிஸ்
ஒரு சட்டத்தில் ஒரு வார்த்தை குழப்பமாக இருந்தால், அந்த வார்த்தையை சுற்றி உள்ள வார்த்தைகளைக் கொண்டு அந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். இது கோர்ட்டில் நீதிபதி ஒரு சட்டத்தில் உள்ள வார்த்தைக்கு பொருள் கண்டுபிடிக்க ஏற்படுத்தி உள்ள முறை ஆகும்.
Noscitur a Sociis என்றால் the meaning of an unclear word or phrase is determined by the words immediately surrounding it.
ஒரு சட்டத்தில் ஒரு வார்த்தை எதைக் குறிக்கிறது என்று தெரியாமல் இருந்தால், அந்த வாக்கியத்தில், அல்லது அந்த சட்டத்தில் உள்ள மற்ற வாக்கியங்களைக் கொண்டு அதற்கு பொருள் கண்டு கொள்ளலாம் என்று சொல்கிறது.
இதை வேடிக்கையாக Birds of a feather flock together என்று கூறுகிறார்கள். ஒரு இறகைக் கொண்டு அந்த பறவையின் இறக்கையை முடிவு செய்யலாம்.
மந்தையில் உள்ள ஒரு மாட்டைக் கொண்டு அது மற்ற மாடுகளை இனம் காணலாம் என்பதே இதன் பொருள். அதுபோல, அந்த மாடு, எந்த மந்தையில் இருக்கிறதோ அந்த இனத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கலாம் என்பதே இந்த நோசிட்டர் சோசிஸ் என்பதன் பொருள்.
இதே போல மற்றொரு வார்த்தையும் உண்டு. அது Ejusdem generis. அதன் பொருள், அதே வகையைச் சேர்ந்தது என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது ஒரு சட்டத்தில், பல பொருள்களைச் சொல்லி இருந்தால், அது போன்ற மற்ற பொருள்களும் சேரும் என்று பொருள்.
உதாரணமாக - ஒரு சட்டத்தில், ஆட்டோமொபைல், டிரக்குகள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள், மற்றும் மோட்டர் மூலம் ஓடும் வாகனங்கள் என்று சொல்லி இருந்தால், அது போன்ற வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக, விமானமும் மோட்டர் மூலமே இயங்குகிறது என்று அதை எடுத்துக் கொள்ள கூடாது. ஒரே வகையைச் சேர்ந்தவைகளை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொருள்.
ஒரு சட்டத்துக்கு அல்லது அதில் உள்ள ஒரு பிரிவுக்கு பொருள் கொள்ளும்போது, கோர்ட், அதில் சொல்லி உள்ள வார்த்தைகளை அதன் சாதாரண பொருளிலேயே முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதே சட்ட மரபு. அதில் குழப்பம் இருந்தால் மட்டுமே இவ்வாறான விளக்கங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறது.
**
No comments:
Post a Comment