Thursday, September 9, 2021

திருக்கோவையார்

 திருக்கோவையார் - 

இந்த நூல் பாடல்களை மாணிக்கவாசகர் இயற்றி உள்ளார். கடவுள் பக்தியில் ஆனந்த பரவச நிலையில் நின்று, ஆன்மாவையும் (உயிர்களில் உள்ள ஆன்மாவையும்), இறை நிலையில் உள்ள பதியையும் (இறைவனையும்), நாயகன்-நாயகி பாவனையில் நினைத்து, பாடிய பாடல்கள் கொண்டது. 

இந்த பாடல்கள் நானூறு கட்டளைக் கலித்துறைகளை உடையது. இந்தப் பாடல்கள், சிற்றின்பத்தை வைத்து, பேரின்ப பொருளைக் கூறி உள்ளது. அதை அகப்பொருள் பகுதியாக வைத்து உரை செய்தவர் நச்சினிக்கினியர். இவரையே பேராசிரியர் என்பர். இவரின் உரைக்கு பேராசிரியர் உரை என்பர். 

நாயகன், நாயகியைக் கண்டு வியப்பது போல ஒரு பாடல். 

தாமரை, நெய்தல், குமிழ், கோங்கு, காந்தள், ஆகிய ஐந்து மலர்களால் தொடுக்கப்பட்ட அழகிய தெய்வ மாலை ஒன்று இளம் பெண்ணாக உருவம் பெற்று, அன்ன நடை பயின்று, மன்மதனின் வெற்றிக் கொடிபோல, ஒளிர்கின்றதே, என்று வியக்கிறான். 

பாடல்: "திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர் தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்கு பைங்காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ மருவளர் மாலையொர் வல்லியின் ஒல்கியன நடைவாய்ந்து உருவளர் காமன் தன் வென்றிக் கொடி போன்று ஒளர்கின்றதே."


No comments:

Post a Comment