திருக்கோளிலி (திருக்குவளை)
திருக்கோளிலியில் கோயில் (திருக்குவளை) கொண்டுள்ள சிவன் பெயர் கோளிலிநாதர். அம்மை பெயர் - வண்டமர் பூங்குழல் அம்மை.
கோள்களுக்கு வந்த தோஷம், இங்கு வந்து சிவனை வழிபட்டதால், நீங்கியதால் இப்பெயர் ஏற்பட்டதாம்.
சிவனின் திருமுடியை கண்டேன் என்று பொய் கூறிய பிரம்மதேவனுக்கு பிடித்த தோஷம் நீங்க, பிரம்மன் இங்கு வந்து, மணலால் சிவலிங்கம் பிடித்து வழிபட்டு, தோஷம் நீக்கிக் கொண்டான் என்பர். எனவே இங்குள்ள சிவனை பிரம்மபுரீஸ்வரர் என்பர்.
இங்குள்ள சிவலிங்கம் மணலால் உள்ளதால், அதற்கு குவளை மலர் சாத்துவர். எனவே இந்த சிவனை திருக்கோளிலிநாதர், திருக்குவளைநாதர் என்பர்.
இங்குள்ள சிவனின் நடனத்தை பிரமர நடனம் என்பர். அதாவது வண்டு பறப்பது போல அந்த நடனம் இருக்குமாம். அந்த வண்டில் அமர்ந்த அம்மைதான், வண்டமர் பூங்குழல் அம்மை.
சுந்தரமூர்த்தி (சுந்தரர்), அடியார்களுக்கு உணவு வழங்க, நிலக்கிழாரிடம் நெல் பெற்றுக் கொண்டபோது, அதை தூக்கிச் செல்ல ஆள் கிடைக்காமல் வருத்தப்பட்டு, "ஆளில்லை எம்பெருமான்..." என்று பாடி சிவனிடம் உதவி பெற்ற தலம்.
மகாவிஷ்ணு, பிரம்மா, அகத்தியர், எல்லா நவக்கிரகங்கள், முசுகுந்த சக்கரவர்த்தி, பஞ்சபாண்டவர்கள், இவர்கள் வந்து வழிபட்ட தலம் இது.
No comments:
Post a Comment