Wednesday, September 15, 2021

அரசு நிலங்கள், கிராம நத்தம் மனைகள், புறம்போக்கு நிலங்கள்

அரசு நிலங்கள், கிராம நத்தம் மனைகள், புறம்போக்கு நிலங்கள்:

பயிர் செய்யும் நிலங்கள் தவிர, மற்ற வகையான புறம்போக்கு நிலங்கள், ஏரிகள், குளங்கள், நதிகள், மலைகள், இவைகளை அரசே தன் வசம் வைத்துக் கொண்டது. அதில் தனி நபருக்கு எந்த உரிமையும் இல்லை.

கிராம நத்தம் மனைகள்:

1908-ல் ஒரு சட்டம் இயற்றி, அரசுக்கு சொந்தமான நிலங்களை எவை என்று சொல்லியுள்ளது. அதில் ஒரு கிராமத்தை ஒட்டி உள்ள சில நிலங்களை வீட்டு மனைகளாக, அங்கு குடியிருப்பவர்கள் வீடு கட்டிக் கொள்ளவும், தனது கைத் தொழில்களை (வண்ணார், குயவர், கொல்லர், தச்சர், விவசாயிகள் நெற்கதிர் சேமிப்பு) செய்து வருவதற்காக விட்டு விட்டது. இதை நத்தம் நிலம் என்று வகைப்படுத்தி உள்ளது. நத்தம் என்றால் கிராமத்தை நத்தி (நெருங்கி அல்லது ஒட்டி) உள்ள நிலம் என்ற பொருளில் சொல்லி இருக்கலாம். இதில் மேல் பிரிவினருக்கு கிராம நத்தம் என்றும், கிராமத்தின் புறச்சேரியில் இருப்பவருக்கு சேரி நத்தம் என்றும் வகைப்படுத்தி அந்த நத்தம் நிலங்களை விட்டு வைத்துள்ளது. அதை யார் வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம். அரசு அந்த நிலத்தை திரும்ப கேட்காது. ஆனால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தால் அரசு உடனே காலி செய்து விடும் உரிமை உண்டு. கிராம நத்தம் என்பதும் ஒருவகை புறம்போக்கு நிலம்தான் என்றாலும், அதை திரும்ப கேட்கும் உரிமை அரசுக்கு இல்லை என்று The Madras Estate Land Act 1908 சட்டத்தில் சொல்லியுள்ளது, மேலும் பல வழக்குகளில் சென்னை ஐகோர்ட்டும் தனது பல தீர்ப்புகளில் அதை உறுதிப் படுத்தி உள்ளது.
**



No comments:

Post a Comment