Wednesday, September 15, 2021

ரயத்வாரி பட்டா

ரயத்வாரி பட்டா:

குடியானவரின் பயிர் செய்யும் உரிமையை ரயத் (ryot) என்பர். இது ஒரு அரபுச் சொல். அந்த காலத்து மன்னர்கள் இருந்தபோது ஏற்படுத்திய சொல். அப்படி பயிர் செய்பவரை (குடியானவரை) ரயத்வாரி என்பர். எனவே குடியானவருக்கு நிலத்தின் உரிமையை வழங்குவதை ரயத்வாரி பட்டா மூலம் முறைப்படுத்தியது அரசு. 

வழக்குகள்:

இப்படி ரயத்வாரி பட்டா வழங்கும்போது, நிலத்தில் மேல்வாரம் உரிமையுள்ள இனாம்தார் (ஜமின்தார்) போன்றோர், தாங்களே அந்த நிலத்தை நேரடியாக பயிர் செய்து வருவதாகவும், எனவே இரு வார உரிமையும் தங்களிடமே இருப்பதாகவும், எனவே பயிர் செய்பவருக்கு ரயத்வாரி பட்டா வழங்க கூடாது என்றும் ஆட்சேபனை செய்தனர். அப்படி அந்த நிலத்தில் பயிர் செய்பவர், இனம்தாரின் கூலி ஆட்கள் என்றும் சொன்னார்கள். 

எனவே அதற்காக, துணை செட்டில்மெண்ட் அதிகாரிகளை நியமித்து, அவர்கள் யார் குடியானவர் என்று முடிவு செய்து, இந்த ரயத்வாரி பட்டா வழங்கினர். 

1948-ல் வந்த எஸ்டேட் ஒழிப்புச் சட்டம்:

இனாம் நிலச் சொத்துக்கள் (கிராமங்கள்) இல்லாமல், பழைய மன்னர்கள், ஜமின்தார் முறையை கொண்டு வந்து, அவர்களுக்கு பல ஏக்கர் நிலங்களைக் கொடுத்து, அதில் வரும் விவசாய வருமானத்தை, மன்னர்கள் பெற்று வந்தனர். இந்த ஜமின்தார்கள், மன்னர்களுக்கு ஏஜெண்டுகளாக இருந்தனர். இப்படி வெகுகாலம் இந்த முறை தொடர்ந்து வந்தது. இதிலும் குடியானவருக்கு பயிர் செய்யும் உரிமை மட்டும் இருக்கும். விவசாய மகசூல் வருமானத்தில் ஒரு பகுதியை ஜமின்தாருக்கு கொடுக்க வேண்டும். அவர் அதில் பாதியை முழுங்கிவிட்டு மீதியை மன்னருக்கு கொடுப்பார். இந்த முறையானது, பிரிட்டீஸ் ஆட்சியின் போதும் தொடர்ந்து இருந்து வந்தது. 

இதில், ஜமின்தார்களிடம் மாட்டிக் கொண்ட, குடியானவர்கள் பாடு திட்டாட்டமாக இருந்தது. எனவே அரசு 1948-ல் இந்த ஜமீன் முறையை ஒழித்து சட்டம் கொண்டு வந்தது. அதுவே ஜமீன் ஒழிப்பும், ரயத்வாரி பட்டா வழங்கும் சட்டம் 1948 என்று பெயர். 

இதன்படி, ஜமின்தார்களிடம் இருந்து வந்த எஸ்டேட்டுகள் ஒழிக்கப்பட்டன. அந்த நிலங்களை, அதில் பயிர் செய்து வந்த குடியானவரிடமே பட்டா கொடுக்கப் பட்டு, அவருக்கே சொந்தமாக்கியது அரசு. ஜமின்தார்களுக்கு அதனால் ஏற்படும் நஷ்டத்தை பணமாக பல தவனைகளில் அரசே கொடுத்து விட்டது. 

ரயத்வாரி பட்டா:

இப்படிக் கொடுப்பபட்ட பட்டாவே ரயத்வாரி பட்டா என்பது. இதன்படி, குடியானவரே நிலத்தின் உரிமையாளர் ஆகி விட்டார். அதாவது, மண்ணில் இருந்த மேல்வாரம் உரிமையும், பயிர் செய்யும் குடிவார உரிமையும், ஒரே நபரான குடியானவருக்கே கொடுக்கப் பட்டது. இருவார உரிமையும் ஒரே உரிமையானது. 

**

No comments:

Post a Comment