திருமண உறவில் கொடுமை (Cruelty)
திருமண உறவில் ஒருவருக்கு ஒருவர் கொடுமை செய்து கொண்டால் அதை ஒரு காரணமாக வைத்து மணமுறிவு (Divorce) பெறலாம் என்று இந்து திருமணச் சட்டம் 1955-ல் சொல்லப்பட்டுள்ளது.
1955 இந்து திருமணச் சட்டம்
1955 திருமணச் சட்டம் கொண்டு வரும்போது, இந்த கொடுமை (cruelty) என்ற காரணத்தைக் கொண்டு மணமுறிவு (Divorce) பெற முடியாது. ஆனால், தம்பதிகள் பிரிந்து வாழும் உரிமை (Judicial Separation) உண்டு. அதை 1955 சட்டத்தில் பிரிவு 10 (1) (b)-ல் வைத்திருந்தது. 1976-ல் அதை எடுத்து விட்டது.
1976 திருமண திருத்தல் சட்டம்
ஆனால் இந்து திருமணச் சட்டம் 1955ஐ 1976-ல் திருத்தம் செய்தது இந்திய பார்லிமெண்ட். அந்த திருத்தல் சட்டத்துக்கு 1976 இந்து திருமணத் திருத்தல் சட்டம் என்று பெயர். அதன்படி, கொடுமை (cruelty) என்பதை ஒரு காரணமாகக் கொண்டு மணமுறிவு பெறலாம் என்று சட்டத்தை மாற்றியது.
அதன்படி இந்து திருமணச் சட்டம் 1955ன் திருத்தல் சட்டமான 1976 சட்டத்தின்படி, கொடுமை (Cruelty) என்பது மணமுறிவுக்கு (Divorce) ஒரு காரணமாக கேட்க முடியும் என்றும், அதை பிரிவு 13 (1) (i-a)-ல் சேர்த்துக் கொண்டது.
கொடுமையில் இரண்டு வகை உண்டு.
1) உடல் ரீதியிலான கொடுமை, 2) மன ரீதியிலான கொடுமை.
உடல் ரீதியிலான கொடுமைகளை நாம் கண்ணால் பார்க்க முடியும். குடிகாரன் மனைவியை அடிப்பது. மனைவிக்கு உடல் ரீதியாக எந்த வகையிலாவது காயம் ஏற்படுத்துவது, மற்றும் மனைவியுடன் உடல் அளவில் உறவில் இல்லாமல் இருப்பது, போன்றவை.
ஆனால், மன ரீதியிலான கொடுமைகளை விளக்க முடியாது. அது மனதைப் பொறுத்தது. சொல்லப் போனால், உடல் ரீதியிலான கொடுமைகளைக் காட்டிலும், மன ரீதியிலான கொடுமைகளால் பெண்கள் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர்.
திருவள்ளுவர் கூட, அதை தெரிந்துதான், "தீயினால் சுட்டபுண் உள் ஆறும், ஆறாதே, நாவினால் சுட்ட வடு" என்கிறார்.
ஒருவருக்கு மனதளவில் பாதிப்பை உண்டாக்கினால், அவரை மரணம் வரை கொண்டு செல்லலாம் என்கின்றனர் மனநல வல்லுனர்கள். அதனால் தானோ என்னவோ அதிக தற்கொலைகளும் நடக்கின்றன.
கொடுமை (Cruelty) என்பதை வரையறுத்துச் சொல்ல முடியாது என்று லார்டு ரீடு என்ற நீதிபதி ஒரு ஆங்கிலேய வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.
Lord Reid in Gollins vs Gollins observed - “No one has ever attempted to give a comprehensive definition of cruelty.”
ஆனாலும், இந்து திருமணச் சட்டம் 1955 (திருத்தல் சட்டம் 1976)-ல் மனு ரீதியிலான கொடுமை () என்பதை ஒரு பொதுவான விளக்கமாகச் சொல்லி உள்ளார்கள். "ஒருவரின் செயல்பாடுகள், மற்றவரின் மனதை காயப்படுத்துவதாக இருந்தாலும், அப்படியான காயங்களுடன் மற்றவருடன் தொடர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும், அதை மனரீதியிலான கொடுமை" என்று விளக்கி உள்ளது.
Mental Cruelty
Mental Cruelty in Section 13 (1) (i-a) in the Hindu Marriage Act 1955 (Amended Act 1976) can broadly be defined as “that conduct which inflicts upon the other party such mental pain and suffering as would make it not possible for that party to live with the other.”
What is cruelty in one case may not amount to cruelty in another case. It is a matter to be determined in each case having regard to the facts and circumstances of that case.
மனத்தளவிலான கொடுமையை கணித்து விட முடியாது. அது தெரிந்தே செய்வதாகவும் இருக்கலாம். தெரியாமல் செய்வதாகவும் இருக்காலம். ஆளுக்கு ஆள் மாறுபடும் இயல்புடையது. மேலும், எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே வாழ்பவர்களும் இருப்பார்கள். ஒரே வார்த்தையில் பிரிந்து செல்பவர்களும் இருப்பார்கள்.
Irretrievable breakdown
இனி சேர்ந்து வாழும் சூழ்நிலையே இருக்காது என்பதை "சரிசெய்ய முடியாத பிரிவு" என்று சொல்வர். அதுதான் Irretrievable breakdown.
இந்திய சுப்ரீம் கோர்ட் Irretrievable breakdown என்பதான, இனி சேர்ந்து வாழும் வாய்ப்பே இல்லாத தம்பதியரை பிரித்து மணமுறிவை கொடுத்து விடலாம் என்றும், அதற்கான ஒரு சட்டப் பிரிவை திருமணச் சட்டத்தில் அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் பலமுறை பல தீர்ப்புகளில் சொல்லி உள்ளது. ஆனாலும், மத்திய அரசு அதை இதுவரை செய்யவில்லை.
இனிச் சேர்ந்து வாழும் வாய்ப்பே இல்லாதபோது, பிரித்து விடுவதுதான் சிறந்தது. ஆனால், இதையும் மணமுறிவுக்கு ஒரு காரணமாக சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமும்.
**
No comments:
Post a Comment