Thursday, September 9, 2021

பஞ்ச கிருத்தியம்

 பஞ்ச கிருத்தியம் 

சிதம்பரத்தில், சிவன், ஆகாய லிங்க மூர்த்தியாக இருப்பார். இறைவனின் ஐந்து தொழில்களாக பஞ்ச கிருத்தியத்தின் பொருட்டு, சிவன் இங்கு ஆனந்த தாண்டவ நிலையில் இருப்பார். 

பஞ்ச கிருத்தியம் - இறைவனின் ஐந்து தொழில்கள். ஆன்மாக்களின் குறைகளை ஒழித்து அதை வீடுபேறு அடையச் செய்வதற்காக, இறைவன் இந்த பஞ்ச கீர்த்தியத்தை நடத்திக் கொண்டு இருக்கிறான். பஞ்ச கீர்த்தியம் என்னும் ஐந்து தொழில்கள் - சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அனுக்கிரகம். (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழில். 

பஞ்ச பூதங்களான நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் ஆகிய ஐந்திலும் இறைவனே இருக்கிறான் என்பது தத்துவம். இந்த ஐந்தையும் அடையாளப்படுத்தும் விதமாக ஐந்து சிவ தலங்கள் உள்ளன. உலகில் உள்ள எல்லா உயிர்களும் இந்த ஐந்து பூதங்களின் சேர்க்கையே. அல்லது இதில் பலவற்றின் சேர்க்கையே. 

நிலத்துக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர். (ஏகாம்பரேஸ்வரர்-ஏலவார்குழலி). 

நெருப்புக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் (அண்ணமலையார்-உண்ணாமுலையாள்). 

நீருக்கு திருவாணைக்காவில் (திருச்சியில்) உள்ள ஜம்புகேசுவரர் (ஜம்புகேசுவரர்- அகிலாண்டஸ்வரி). 

ஆகாயத்துக்கு சிதம்பரத்தில் உள்ள நடராஜர் (கனகசபைநாதர்- உமையாம்பிகை என்னும் சிவகாமசுந்தரி). 

காற்றுக்கு காளத்தியில் (காளகஸ்தியில்) உள்ள காளத்தீசுவரர் (காளத்தீசுவரர்- ஞானபிரசுனாம்பிகை.


No comments:

Post a Comment