ஒரு பத்திரத்தைப் பதிவுக்குக் கொடுக்கும்போது, யார் அதை பத்திரப் பதிவாளரிடம் கொடுக்க வேண்டும் என்று இந்திய பதிவுச் சட்டம் 1908 பிரிவு 32-ல் சொல்லப்பட்டுள்ளது.
1) ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுத்தவர்களில் யாராவது, அதை பதிவுக்கு கொடுக்கலாம்.
2) ஒரு பத்திரத்தின் மூலம் உரிமை பெறுபவர் (அதாவது கிரயப் பத்திரமாக இருந்தால், அந்த சொத்தை வாங்குபவர்களில் யாராவது ஒருவர்) அந்த பத்திரத்தை பதிவுக்கு கொடுக்கலாம்.
3) எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர், இவர்களின் பொறுப்பாளர் அல்லது பவர் ஏஜெண்டு, அல்லது கார்டியன், அந்த பத்திரத்தை பதிவுக்கு கொடுக்கலாம்.
4) இந்த பத்திரம் ஒரு கோர்ட் டிகிரியாக இருந்தால், அந்த டிகிரி மூலம் உரிமை பெறும் நபர் (குறிப்பாக வாதி அல்லது பிரதிவாதி அல்லது அவர்களின் பவர் ஏஜெண்ட்) அந்த கோர்ட் டிகிரியை, பதிவுக்கு கொடுக்கலாம்.
5) அந்த பத்திரத்தை எழுதிக் கொடுப்பவர் ஒரு அரசு அதிகாரியாக இருந்தால், அல்லது ஐகோர்ட் கோர்ட் அதிகாரியாக இருந்தால், அல்லது சிவில் கோர்ட் நீதிபதியாக இருந்தால், அவர் அந்த பத்திரத்தை நேரில் சென்று பதிவாளரிடம் பதிவுக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக, “அவர் ஒரு அரசு அதிகாரி என்றும், அவர் நேரில் வரத் தேவையில்லை” என்று ஒரு கடிதம் கொடுத்தால் போதுமானது. இதை இந்தியப் பதிவுச் சட்டம் 1908 பிரிவு 88-ல் சொல்லியுள்ளது.
6) அரசுக்கு ஒரு சொத்தை எழுதிக் கொடுத்தாலும், அரசு அதிகாரி நேரில் சென்று அந்த பத்திரத்தை பதிவுக்கு கொடுக்க தேவையில்லை. அப்போதும், அவர் நேரில் வருவதற்கு விலக்கு அளிக்கப்பட்டவர் என்று கடிதம் கொடுத்தால் போதுமானது.
7) இவ்வாறு விலக்கு அளிக்கப்பட்ட அரசு அதிகாரி கடிதம் கொடுக்கும் போது, அதில் சந்தேகம் எழுந்தால், பதிவாளர், அதை அரசின் செயலாளருக்கு அனுப்பி, அது சரியான அரசு அதிகாரிதான் எழுதிக் கொடுத்தாரா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
**
No comments:
Post a Comment