காம்போதி, தோடி இவைகள் பணக்கார ராகம். ஆனால், ‘மார்க ஹிந்தோளம்’ லேசில் வசப்படாது. மிக பிரயாசைப்பட வேண்டும். இது கைவசமாகி விட்டால், அந்த சங்கீத தேவதையே அடிமை என்றுதான் அர்த்தம். அதன் ஆரோகணத்தில் ஏழுசுரங்கள், இப்படி போகும். ‘ஸரிகமபதநிஸ’. இதன் அவரோகணத்தில் இப்படி திரும்பும், ‘ஸநிதபமகஸ’. கவனித்தால், திரும்பி வரும்போது ‘ரி’ கிடையாது. அதுதான் விஷேசம். மோனலிசா சித்திரத்தை யார் எங்கிருந்து பார்த்தாலும் அது அவர்களையே பார்ப்பதுபோலவே இருக்கும். மனோரஞ்சிதப் பூ, நினைத்த வாசத்தை கொடுக்கும். அதுபோலத்தான் இந்த ராகமும். குதூகலமான நேரங்களில் பாடும்போது சந்தோஷமாக இருக்கும். வேறு சமயங்களில் சாந்தமாக இருக்கும். சில நேரங்களில் சோகமாக இருக்கும். அதுதான் இதன் தனித்தன்மை.--(நன்றி: தமிழறிஞர் திரு. அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகளிலிருந்து)
No comments:
Post a Comment