சீனியர் வக்கீல்கள்
வக்கீல்கள்
சட்டம் 1961ன்படி வக்கீல்களில்
இரண்டு வகை;
1) சீனியர் வக்கீல்கள் (Senior Advocates).
2) மற்ற வக்கீல்கள் (Other Advocates).
சீனியர்
வக்கீல் என்பது சட்ட அனுபவத்தில் மூத்தவர் என்றும் அதனால் அவரை மூத்த வழக்கறிஞர்
என்றும் சொல்வர். (வயதில் மூத்தவர்
அல்ல, வக்கீலாக பலவருடம் இருந்தவர்
என்பதாலும் அல்ல).
மூத்த
வக்கீல் (Senior Advocate) யார்
என்று கோர்ட்டில் அடையாளம் கண்டுபிடிப்பதற்கு அவர் அணியும் கருப்பு கவுனில் சில
அடையாளங்கள் இருக்கும். அவரின்
இரண்டு கைகளும் தனியே தோள்பட்டை துணிக்குள் இருந்தாலும், மேலும் இரண்டு கைகள் கொண்ட துணி தைக்கப்பட்டு தனியே தொங்கிக்
கொண்டிருக்கும். அவரின் முன்னால்
நின்று பார்க்கும்போது இது தெரியும். அவரைப் பின்னால் இருந்து பார்த்தால், அவரின் தோள்பட்டையில், சாதாரண
வக்கீலின் கவுனுக்கு இருக்கும் மடிப்புகள் இல்லாமல், இவருக்கு அந்த மடிப்புகள் தெரியாமல் ஒரு தனி துணி தொங்கிக்
கொண்டிருப்பதுபோல தைத்திருப்பர். (இவைகள்
அவரைப் பற்றிய தோன்றத்தில் வித்தியாசம்).
அவர்
குறைந்த பட்சம் 10 வருடமாகவது
ஐகோர்ட்டில், அல்லது சுப்ரீம்
கோர்ட்டில் நேரடியாக வழக்குகளை வாதாடி இருக்க வேண்டும். அவைகளில் சமுதாய நன்மைகள், சமுதாயப்
பிரச்சனைகள், சட்ட சிக்கல்கள்
நிறைந்த வழக்குகளை திறம்பட கையாண்டிருக்க வேண்டும். இவ்வாறு திறமைகள் கொண்ட வக்கீலை, அவரின் மற்ற வக்கீல் நண்பர்கள், முன்மொழிந்து, அதன்படி, ஐகோர்ட் நீதிபதிகள் கொண்ட கமிட்டி, சூப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கொண்ட கமிட்டி அதை
உறுதி செய்து அவருக்கு சீனியர் வக்கீல் என்ற அந்த அந்தஸ்தை வழங்கும். அதுமுதல், அந்த சீனியர் வக்கீல், அவரின்
கட்சிக்காரர்களிடம் நேரடித் தொடர்பை விட்டுவிடவேண்டும். அவர்களுக்காக வக்காலத்துப் போட்டு வாதாடக் கூடாது.
ஆனால், வேறு
வக்கீல்கள் கொடுக்கும் வழக்கில் உள்ள சட்ட சிக்கல்களை இவர் கோர்ட்டில் பேச
வேண்டும். அதற்கான வக்கீல் பீஸ்
என்னும் கட்டணத்தை இந்த வக்கீல் கொடுக்க வேண்டும்.
கோர்ட்டுகளில், சீனியர் வக்கீல்கள் ஆவது பெருமைக்குறிய
விஷயம்தான். இதை
தற்போதுள்ள ஐகோர்ட் நீதிபதிகள் கொண்ட கமிட்டி, அந்த கோர்ட்டில் யார் யாரை சீனியர் வக்கீல்களாக நியமிக்கலாம் என்று முடிவு
செய்யும்.
தற்போது
கர்நாடகா ஐகோர்ட்டில் 15 சீனியர்
வக்கீல்கள் பரிந்துரை பட்டியலில் இருந்தனர். அதை எதிர்த்து ஒரு வக்கீல் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்
செய்துள்ளார், இன்னும் அந்த மனு
ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவரின்
குறை என்னவென்றால், பல வக்கீல்கள், மாவட்ட கோர்ட்டுகளில் சட்ட திறமையுடன்
இருந்துவருகிற போதும், ஐகோர்ட்
வளாகத்துக்குள் இருக்கும் வக்கீல்களையே சினியர் வக்கீல்கள் ஆக்குவது சட்டத்துக்கு
ஏற்புடையதல்ல என்றும் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
வழக்கின்
முடிவு இனிமேல்தான் தெரியவரும்.
.
No comments:
Post a Comment