தொப்புள்
கொடி
“நாபிக்
கொடி அல்லது தொப்புள் கொடியானது, சிசுவின் நாபியோடும் மாயையின் மத்தியிலும்
ஒட்டிக் கொண்டிருக்கும்; சில சமயங்களில் மாயையின் ஓரத்திலும் ஒட்டிக்
கொண்டிருப்பதும் உண்டு; இது 12 அங்குலம் முதல் 50 அங்குலம் வரை நீளமுள்ளதாயும் சில
சமயம் சிசுவின் கழுத்தைச் சுற்றிக் கொண்டும் இருக்கும்; இந்தக் தொப்புள் கொடி, சிசுவின்
சந்து எலும்பின் உட்புறத்திலிருந்து வரும் இரண்டு நாடிகளாலும் மாயையினின்று வரும்
இரத்தத்தை சிசுவிற்குத் திருப்பிக் கொண்டு வருகின்ற ஒரு நாளத்தினால் உண்டானது;
இந்த இரத்தச் சரங்களெல்லாம் பிசின் தன்மையுள்ள ஒரு வஸ்துவினால் ஒட்டப்பட்டு
முறுக்குற்று நெழிந்திருக்கின்றன; சிசு ஜனித்து சுமார் 20 நிமிசம் சென்றதும் அதிலிருந்து
நாடி ஓட்டம் நின்றுவிடும். நாபிக் கொடியை துண்டித்த பிறகு அது ஐந்து அல்லது ஆறாம்
நாளில் உலர்ந்துவிடும்;
(மானிட
மர்ம சாஸ்திரம் என்ற நூலில் (1918-ம் ஆண்டு பதிப்பு) அதன் ஆசிரியரான எஸ்.சாமிவேல்
அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக, ஈழத்து பூராடனார் எழுதிய “உலகளாவிய தமிழ்" என்ற நூலில் தன்
நினைவுகளைக் குறிப்பிடுகிறார்).
**
**
இந்த நூல் பிரதி கிடைக்குமா
ReplyDeleteநண்பருக்கு வணக்கம்!
ReplyDeleteஈழத்து பூராடனார் எழுதிய "உலகளாவிய தமிழ்" என்ற நூலில் அவர் படித்ததாக குறிப்பிட்டு இதை எழுதி உள்ளார்; அது மானிட மர்ம சாஸ்திரம் என்ற நூலில் அதன் ஆசிரியர் எஸ்.சாமிவேல் அவர்கள் எழுதியதாக மட்டும் குறிப்பிட்டுள்ளார்; அந்த நூலைப் பற்றி வேறு குறிப்பு ஏதும் அவர் சொன்னதாக ஞாபகம் இல்லை; பூராடனாரின் உலகளாவிய தமிழ் என்னும் நூல் கிடைத்தால் அதில் தேடிப்பார்க்கவும்.