பூமியைப் பற்றிய ஆச்சரியங்கள்--2
சந்திரன், பூமியைச் சுற்ற ஒரு மாதம் எடுக்கிறது; மிகச் சரியாகச்
சொன்னால், 27 நாட்கள் 7 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது; பூமிக்கும் சந்திரனுக்கும்
இடைப்பட்ட அதிகபட்ச தூரம் சுமார் 4 லட்சம் கி.மீ; குறைந்தபட்ச தூரம் சுமார் மூன்றே
முக்கால் லட்சம் கி.மீ;
பூமியில் உள்ள காற்றுதான், சூரியனின் வெப்பத்தை ஒரளவு தடுத்து
குறைக்கிறது; காற்று இல்லாவிட்டால், பூமி சூடாகிவிடும்: அந்தச் சூடு குறைய
நாட்கணக்கில் நேரமாகும்;
சூரியன் நெருப்புக் கோளமாகவே இருக்கிறது; அத்தனையும் வாயு; எல்லா
நட்சத்திரங்களையும் போலவே, சூரியனும் ஒரு வாயு கோள் ஆகும்; அது நெருப்புக் கோளமாக
இருப்பதால், அது தன்னைத் தானே சுற்றினால், ஒரேமாதிரியாகச் சுற்ற முடியாது; காற்று
சுற்றுவதுபோலவே சுற்றவேண்டி இருக்கும்! சூரியனின் நடுப்பகுதியான உள்பகுதி வேகமாகச்
சுற்றும்; அது தன்னைதானே அப்படி உள்பகுதி சுற்றவர 25 நாட்கள் ஆகுமாம்; சூரியனின்
வெளிப்பகுதி கொஞ்சம் மெதுவாகச் சுற்றுமாம்; அது தன்னைத்தானே சுற்றிவர 34 நாட்கள்
எடுக்குமாம்; சூரியனைப் பற்றிய ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாட்டில் கொடைக்கானலில்
உள்ளது; சூரியனின் ஆராய்ச்சி நிலையம் கலிபோர்னியாவிலும் உள்ளது;
பௌர்ணமியை பூரணை என்பர்; பூரணை நாட்களில் சந்திர கிரகணம் ஏற்படும்;
அமாவாசை நாட்களில் சூரிய கிரகணம் ஏற்படும்; ஆனால் எல்லா மாதங்களிலும் இந்த
கிரகணங்கள் நிகழாது; சந்திரனின் நிழல் சுமார் 80 கி.மீ. பரப்பளவில் மட்டுமே
பூமியில் விழும்; எனவே அந்தப் பகுதி மட்டுமே கிரணம் தெரியும்; அவ்வாறான சூரிய
கிரகணம் சுமார் 7 நிமிடம் 58 நொடிகள் மட்டுமே இருக்கும்; ஆனால் சந்திர கிரகணம்
மணிக்கணக்கில் இருக்கும்; ஒரு வருடத்தில் ஏழு கிரகணங்களுக்குமேல் நிகழாதாம்;
அப்படி ஏழு கிரகணத்தில், 5 சூரியகிரகணமும், 2 சந்திரகிரகணமும் ஆகும்; அல்லது 4
சூரிய கிரகணம், 3 சந்திர கிரகணம் நடக்கலாமாம்; ஒரு வருடத்தில் குறைந்த பட்சம்
இரண்டு சூரிய கிரகணத்துக்கு குறையாமல் நடக்குமாம்;
சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் உள்ள கிரகங்கள் புதனும்,
சுக்கிரனும் ஆகும்; இந்த இரண்டும் சூரியனுக்கு அருகில் உள்ள கிரகங்கள்;
சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் இருப்பதால் இதை உட்கிரகங்கள் என்கின்றனர்; இந்த
இரண்டு கிரகங்களும் சில நேரங்களில் பூமியின் பாதை வழியாகவும் செல்லுமாம்; மற்ற
கிரகங்களான, செவ்வாய், வியாழன் (குரு), சனி, இவைகள் பூமிக்கு வெளிப் பாதையில் உள்ள
கிரகங்கள்;
புதன் கிரகம் சூரியனுக்கு அருகில் உள்ளது; இது பூமியின் உட்கிரகம்;
புதன் கிரகம், சூரியனிலிருந்து அருகில் சுமார் 4 கோடியே 60 லட்சம் கி.மீ தூரத்தில்
உள்ளது; தூரத்தில் 7 கோடி கி.மீ தூரத்தில் உள்ளது; இருக்கும் எல்லா கிரகங்களைக்
காட்டிலும் புதன் தான் மிகச் சிறிய கிரகம்; இதன் குறுக்களவு (விட்டம்) 4,800
கி.மீ. (பூமி 12,000 கி.மீ.) அதாவது சந்திரனைவிட புதன் ஒன்றரை மடங்கு மட்டுமே பெரியது; புதன் ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 88 நாட்கள் எடுத்துக் கொள்ளும்; புதன்
தன்னைத்தானே சுற்றவும் 88 நாட்கள் எடுத்துக் கொள்ளும்; அதனால், புதனுக்கு 88
நாட்கள் ஒருபகல் பொழுது; 88 நாட்கள் ஒரு இரவுப் பொழுது இருக்கும்; சூரியனுக்கு
பக்கத்தில் இருக்கும் புதனில் வெப்பம் 400 டிகிரியாக இருக்குமாம்; கொஞ்சம்
தூரத்தில் சுற்றும்போது 280 டிகிரியாக இருக்குமாம்; 100 டிகிரியே வெந்து
போய்விடும்; புதனின் மறுபாதி சூரியனைப் பார்க்காமல் இரவாக இருக்கும் பகுதியில்
கடும் குளிராக இருக்குமாம்; என்ன வேடிக்கை! அதனால், புதனில் உயிர் இனங்கள் இருக்க
வாய்ப்பில்லை என்று நினைக்கிறார்கள்;
சுக்கிரன் கிரகமானது பூமியைப் போன்றே இருக்குமாம்; அதன் குறுக்களவு
பூமியைப் போலவே சுமார் 12,000 கி.மீ. சுக்கிரன், சூரியனைச் சுற்றிவர 224 நாட்கள்
எடுத்துக் கொள்ளுமாம்; சுக்கிரன் சூரியனிலிருந்து சுமார் 11 லட்சம் கோடி கி.மீ.;
சூரியனிலிருந்து பூமி 15 கோடி கி.மீ. தூரம்; சுக்கிரன் உள்கிரகம்; அதாவது
சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்டு உள்ள கிரகம்; (புதனும், சுக்கிரனும் உட்கிரகங்கள்);
பூமிக்கு அருகில் உள்ள துணை கிரகம் சந்திரன்; அதற்கு அடுத்து, பூமிக்கு மிக
அருகில் உள்ள கிரகம் இந்த சுக்கிரன்தான்;
**
No comments:
Post a Comment