பூமியைப் பற்றிய ஆச்சரியங்கள்--3
பூமியைப் போலவே இருக்கும் கிரகம்தான் சுக்கிரன்; இதை Venus வீனஸ் என்கின்றனர்; சுக்கிரனின் விட்டம் சுமார் 12,000 கி.மீ.;
பூமியின் விட்டமும் கிட்டத்தட்ட இதே 12,000 கி.மீ.தான்; சுக்கிரன், சூரியனை
ஒருமுறை சுற்ற 224 நாட்கள் எடுத்துக் கொள்ளும்; சுக்கிரனின் சுற்றுப் பாதையானது
கிட்டத்தட்ட வட்ட வடிவிலேயே இருக்கும்; மற்ற கிரகங்களுக்கு நீள் வட்டத்தில்
இருக்கும்; சூரியனிலிருந்து 10 கோடியே 75 லட்சம் கி.மீ தூரத்தில் சுக்கிரன்
இருக்கிறது; பூமி, சூரியனிலிருந்து 15 கோடி கி.மீ தூரத்தில் இருக்கிறது; அப்படிப்
பார்த்தால் பூமியிலிருந்து சுக்கிரன் நாலேகால் கோடி கி.மீ. தூரத்தில்தான்
இருக்கிறது;
பூமியிலிருந்து செவ்வாய் இருக்கும் தூரம் ஐந்தரைக் கோடி கி.மீ.
அப்படிப் பார்த்தால், பூமியிலிருந்து சுக்கிரனே மிக அருகில் இருக்கிறது; சுக்கிரனே
மிக அதிக பிரகாசமாகத் தெரியும்; பூமியிலிருந்து பார்ப்பதற்கு சாதாரண கண்ணுக்குத்
தெரியும் கிரகம் இந்தச் சுக்கிரன்தான்; இந்தச் சுக்கிரன், சூரியனுடன் காலையில் கிழக்கில்
தோன்றும்; மாலையில் மேற்கில் சூரியனுடன் மறையும்; அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு
முன்பே கீழ்வானில் இது பளிச்சென்று தோன்றும்; இதைத்தான் “விடிவெள்ளி” என்பர்;
விடியப் போகிறது என்பதை பழங்காலத்தில் இந்த சுக்கிரன் என்னும் விடிவெள்ளியை
வைத்துத்தான் கணக்கிட்டனர்;
சுக்கிரனும் வெப்பமாகவே இருக்கும்; சூரியனுக்குப் பக்கத்தில் இது
இருப்பதால், இதன் வெப்பம் 427 டிகிரியாம்; எனவே அங்கு தாவரங்களோ, மற்ற உயிரனங்களோ
வாழ வாய்ப்பில்லை என்கின்றனர்;
**
No comments:
Post a Comment