Friday, March 25, 2016

“ஐந்து மிளகாய் துண்டுகளுள்ள வடைகள்”


“ஐந்து மிளகாய் துண்டுகளுள்ள வடைகள்”
(எழுத்தாளர் தில்லை நடராஜா எழுதிய “அப்பா” என்ற கதைத் தொகுப்பிலிருந்து ஒரு சிறு பகுதி)......

“1961ம் ஆண்டு யாழ்பாணச் சத்தியாக்கிரகத்தை அடுத்து இராணுவத்தினர் குவிக்கப்பட்ட நேரத்தில், ஒரு விருந்துக்காக இரண்டாயிரம் உளுந்து வடைகள் தயாரிக்கும் பொறுப்பு தந்தையாரிடம் ஒப்படைக்கப்பட்டது; கூடவே ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது;

நிபந்தனை இதுதான் – “ஒவ்வொரு வடைக்குள்ளும் ஐந்து துண்டு மிளகாய் இருக்க வேண்டும்”.

சாதாரண கடையில், ‘மிளகாய்த் துண்டுகள் எண்ணி வடையில் வைத்துச் சுடுவதும், இராணுவத்தினர் தொடர்பும் பிரச்சனை என்பதால்’, இந்த ஓடரை எடுத்துக் கொள்ள முதலாளி விரும்பவில்லை; ஆனால் தந்தையார் துணிந்து விட்டார்;

இரண்டாயிரம் வடையையும் வாங்கிச் செல்ல வந்த இராணுவ அதிகாரி, “ஒவ்வொரு வடையிலும் சரியாக ஐந்து மிளகாய்த் துண்டுகள் இருக்குமா?” எனக் கேட்டார்;

“ஓ! .. அதெல்ல்லாம் சரியாக இருக்கும்” என்று தந்தையார் பதிலளித்ததுதான் தாமதம் – இராணுவ அதிகாரி ஒரு வடையை மெதுவாகக் கிள்ளி, அதிலுள்ள மிளகாய்த் துண்டுகளை எண்ணிப் பார்த்துவிட்டு, கோபமாக, “என்ன, நாலு துண்டுகள்தான் இருக்கு?” என்றார்;

தந்தையார் சிறிதும் பதற்றப்படாமல், “இரண்டொரு வடையில் நாலு துண்டுகள் வைத்ததாக நினைவு; மற்றதெல்லாத்துக்கும் சரியாக ஐந்து துண்டு மிளகாய் வைத்திருக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே ஒரு வடையை எடுத்து, மெதுவாக நுள்ளி மூன்று மிளகாய்த் துண்டுகளை அதிகாரியின் கையில் கொடுத்து, மிகுதி வடையைத் தமது வாயில் போட்டு, “அம்மா! உறைக்குமே! நாலு ஆ... ஐந்து... ஸ்...” என்று கணக்குக் காட்டினார்;
பணம் கொடுக்கப்பட்டது, தன் முதலாளியின் வயிற்றில் பால் வார்த்தார்;

“தொழிலைச் சரியாகச் செய்கிறோம் என்றால், ஆர்மிக்கு மட்டுமல்ல, யாருக்குமே பயப்பட வேண்டாம்.”
**



No comments:

Post a Comment