Saturday, March 26, 2016

பூமியைப் பற்றிய ஆச்சரியங்கள்--1

பூமியைப் பற்றிய ஆச்சரியங்கள்-1
பூமி உருண்டையாக இருந்தாலும், அதன் மேல், கீழ் பகுதிகள் சிறிது தட்டையாகவே இருக்கிறது; வடதுருவம் தென்துருவம் என்று இரு துருவங்கள் உண்டு; பூமியின் மேல், கீழ் பகுதிகள் இவை; மேலிருந்து கீழ் உள்ள நீளம் சுமார் 12,600 கி.மீ; பூமியின் நடுப்பகுதிக்குப் பெயர் பூமத்திய கோட்டுப் பகுதி; இதன் நீளமும் கிட்டத்தட்ட அதே 12,600 கி.மீ. தூரம்தான்; 

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் இயல்புடையது; அதற்கு சுமார் 24 மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும் (மிகச் சரியாகச் சொன்னால் 23 மணி 56 நிமிடம் எடுத்துக் கொள்ளும்); பூமியானது சூரியனைச் சுற்றி வர ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும் (மிகச் சரியாகச் சொன்னால், 365-1/4 நாட்களை எடுத்துக் கொள்ளும்); சூரியனிலிருந்து பூமியின் தூரம் சுமார் 15 கோடி கி.மீ; சூரியனை விட்டு பூமி தூரத்தில் இருக்கும்போது அதன் தூரம் 15 கோடியே 13 லட்சம் கி.மீ; பக்கத்தில் இருக்கும் போது அதன் தூரம் 14 கோடியே 88 லட்சம் கி.மீ; அப்படிப் பார்த்தால், வித்தியாசமான தூரமே சுமார் 25 லட்சம் கி.மீ; இப்படியாக 25 லட்சம் கி.மீ தூரத்தில் இருக்கும்போதே இப்படி வெயில் அடிக்கிறது என்றால், 25 லட்சம் கி.மீ.க்கு குறைவான தூரத்துக்கு வந்தால், வெயில் எப்படி இருக்கும்; சூரியனின் நெருப்பில் எறிந்து போய்விடுவோம்; 

பூமியைவிட, சூரியன் 3 லட்சம் மடங்கு கனமானது; சூரியனின் வெப்பமானது ஆறாயிரம் டிகிரி; 100 டிகிரிக்கே கை வெந்துபோய்விடும்; ஆறாயிரம் டிகிரி என்றால்!
பூமியின் உட்புறம் எப்படி இருக்கும் என்று யாரும் கணிக்க முடியவில்லையாம்; பூமிக்கு அடியில் ஒரு கி.மீ. தூரத்துக்கு அப்பால், இந்த பூமி எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது; பூகம்பம், எரிமலை இவற்றைக் கொண்டே, பூமிக்கு அடியில் எப்படி இருக்கும் என்று யூகித்துள்ளனராம்; பூமியின் உட்பகுதி கொதிக்கும் நெருப்புக் கோளமாகவே இருக்கும் என்றே நம்புகிறார்கள்;
கடலில் உள்ள உப்பு ஒவ்வொரு வருடமும் எவ்வளவு அதிகமாகிக் கொண்டு வருகிறது என்பதைக் கணக்கிட்டுள்ளனர்; அதைக் கொண்டு, ஒரளவு, இந்த பூமி தோன்றி எவ்வளவு காலம் ஆகிஇருக்கலாம் என்று யூகிக்கின்றனர்;
பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம் (உபகிரகம்) சந்திரன்;
சூரியனின் குறுக்களவு 13 லட்சம் கி.மீ; ஆனால் பூமியின் குறுக்களவு சுமார் 13 ஆயிரம் கி.மீ; அப்படியென்றால், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள வித்தியாசம் ஆயிரத்திலும், லட்சத்திலும் இருக்கிறது; ஆகா, எப்படிப்பட்ட சூரியனாக இருக்கிறது!
**

No comments:

Post a Comment