Surname
சர்-நேம்
ஜப்பான் பெண்கள் இனி கணவரின் பெயரையே சர்-நேம்-ஆக (துணைப் பெயராக)
வைத்துக் கொள்ள வேண்டுமாம்; தங்களின் திருமணத்துக்கு முன்னர் (சிறுமியாக
இருந்தபோது) பெற்றோர் வைத்த பெயரை மட்டும் வைத்துக் கொள்ள கூடாது; இப்படி, ஜப்பான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது;
எல்லா ஜப்பான் பெண்களுக்கும் இந்த தீர்ப்பீன் மீது அதிருப்தி
உள்ளதாம்;
நல்லவேளே, தமிழ்நாட்டில் இது சட்டமாக இல்லை; ஆனாலும், கணவர் பெயரையோ, அவரின்
பெயரின் முதல் எழுத்தையோ மனைவி தன் பெயருக்கு முன்னால் இனிசியலாக வைத்துக் கொள்வது
பெரும்பாலும் வழக்கமாக இருக்கிறது; இது தவறுதான்; அதிகமான சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது;
இங்கு தமிழ்நாட்டில், பெண்கள் பிறந்து, ஒரு பெயர் வைத்து, அவர் வளர்ந்து பள்ளியில்
சேர்க்கும்போது, தன் தகப்பனின் பெயரின் முதல் எழுத்தை
இனிசியலாக வைத்து விடுவார்கள்; பள்ளி
படிப்புச்சான்றிதழ்களில் அந்தப் பெண்ணின் தகப்பனின் பெயரின் முதல் எழுத்து
இனிசியலாக இருக்கும்; அல்லது சில சமுதாயத்தில், தகப்பனின் பெயரை, அந்தப் பெண்ணின் பெயருக்கு அடுத்து
சர்-நேம்-ஆக வைத்துக் கொள்கிறார்கள்;
அதற்குப்பின், அந்த பெண்ணுக்கு திருமணம் செய்தபின், கணவன் வீட்டில், நடக்கும் எல்லா செயல்களுக்கும்,
(பாங்க் கணக்கு திறப்பது, பாஸ்போர்ட் எடுப்பது,
ஓட்டு அட்டை வாங்குவது, ரேஷன்கார்டு வாங்குவது,
சொத்துக்கள் வாங்குவது, பாங்க் லோன் வாங்குவது,
கார், பைக் வாங்குவது) என இப்படி பல
செயல்களைச் செய்யும்போது, அந்த பெண்ணின் இளமைகாலப் பெயரான
மெய்டன் பெயருடன், கணவனின் பெயரின் முதல் எழுத்தை இனிசியலாக
வைத்து விடுகிறார்கள்; அந்த பெண்ணின் தகப்பனின் பெயர்
இனிசியலாக இருந்ததை, வேண்டுமென்றே எடுத்து விடுகிறார்கள்;
இப்படி செய்வதால், குழப்பம்தான் மிஞ்சும்; பொதுவாக,
படிக்காத பெண் விஷயத்தில் இது அவ்வளவாக பாதிப்பை இதுவரை
ஏற்படுத்தவில்லை; ஏனென்றால், அந்த
பெண்ணுக்கு எந்த ரெக்கார்டுகளிலும் அவரின் மெய்டன் பெயருடன் தகப்பனாரின் இனிசியல்
இருக்காது; எனவே அவர் கணவன் வீட்டுக்குப் போனபின்னர்,
ஒரு சொத்தை வாங்கும்போது, தன் கணவனின்
இனிசியலை வைத்துக் கொள்வார்; அப்போதுதான் அவர் பெயருக்கு ஒரு
அங்கீகாரமே கிடைக்கிறது; எனவே இதில் சிரமம் ஏதும்
இருப்பதில்லை; பின்னாளிலும் சிரமங்கள் வருவதில்லை;
ஆனால், பள்ளியிலோ, கல்லூரியிலோ
படித்த பெண், தன் பள்ளி, கல்லூரி
சான்றிதழ்கள் அனைத்திலும், தன் மெய்டன் பெயருக்கு முன்னால்,
தன் தகப்பனின் இனிசியலை போட்டுத்தான் சான்றிதழ்கள் இருக்கும்;
No comments:
Post a Comment