Thanks Giving Day
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 4-வது வியாழக்கிழமை இந்த நன்றி தெரிவிக்கும் விழா என்னும் Thanks Giving Day அமெரிக்கர்களால் கொண்டாடப் படுகிறது;
இந்தியாவில் அறுவடைத் திருநாளாக இதை கொண்டாடுகின்றனர்; உணவைக் கொடுத்த கடவுளுக்கு
நன்றி என்று இதைக் கொண்டாடுகின்றனர் அமெரிக்கர்கள்; (கனடாவில் இதையே அக்டோபர்
இரண்டாம் திங்கள் கிழமை கொண்டாடுகிறார்கள்); இந்தியாவில் தை மாதம் 1-ம் தேதி
கொண்டாடுகின்றனர்; வடஇந்தியாவில் மகர சங்காரந்தி என்றும், தென்இந்தியாவில் பொங்கல்
என்றும் பெயர்;
1620-ல் மேபிளவர் (Mayflower) என்ற கப்பல் ப்ளோமவுத் துறைமுகத்தில் இருந்து
(இங்கிலாந்தில் உள்ள துறைமுகம்) புது உலகம் காணப் புறப்பட்டது; கடலில் தத்தளித்து
தடுமாறி 66 நாட்கள் கடந்து, அதிலிருந்த 102 பயணிகளும் ஒரு இடத்தை அடைகின்றனர்; அது
அவர்கள் வரவேண்டிய இடம் இல்லை; மறுபடியும் ஒருமாதம் கடலில் திரிந்து கடைசியாக
அடைந்த இடமே மாசாசூசெட்ஸ் துறைமுகம்; இது அமெரிக்காவில் உள்ளது; அங்கு தங்கி, தங்களின்
உணவுக்காக முதல் மக்காச்சோளத்தை உற்பத்தி செய்கின்றனர்; அதை அங்குள்ள ஆதி அமெரிக்க
மக்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்கின்றனர்; இந்த விருந்து நிகழ்ச்சியை நன்றி
தெரிவிக்கும் நாளாகக் கொண்டாடுகின்றனர்;
இன்றும் அதேபோல, பழைய பழக்க வழக்கத்தில் உள்ள உணவைச் சமைத்து சாப்பிட்டு,
நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்வார்களாம்!
இதை, 1789-ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் வாஷிங்டன் ஒரு சட்டமாகவே
இயற்றி இருக்கிறார்; அப்போதிலிருந்தே இந்த நன்றி தெரிவிக்கும் நாள்
கொண்டாடப்படுகிறதாம்! பின்னர் ஜனாதிபதியாக வந்த அப்ரகாம் இதை ரத்து செய்து
விட்டாராம்!
பின்னர், 1941லிருந்து தேசிய விடுமுறை நாள் அறிவித்து கொண்டாடி
வருகின்றனர் அமெரிக்கர்கள் அனைவரும்!
அமெரிக்காவில்இன்று இப்போது வியாழக்கிழமை தொடங்குகிறது; (இந்தியாவில் இப்போது வியாழக்கிழமை
முடிகிறது);
நியூயார்க் நகரில் மட்டும் சுமார் 3
மில்லியன் மக்கள் தெருவில் கூடி நின்று அந்தப் பேரணியை பார்வையிடுகின்றனர்; பெரிய
திருவிழாவாக நடக்கிறது; வரும் இளம் தலைமுறைகளுக்கு அதன் சரித்திரத்தை சொல்வதற்காக
இந்த ஏற்பாடாம்!
நாமும் அவர்களின் நன்றி தெரிவிக்கும் விழாவை வாழ்த்திச் சிறப்பிப்போம்!
**
No comments:
Post a Comment