கந்தரலங்காரம் -12
படைபட்ட வேலவன் பால் வந்த வாகைப் பதாகை என்னும்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதி கிழிந்து
உடைபட்டது அண்ட கடாகம் உதிர்ந்தது உடுப்படலம்
இடைபட்ட குன்றழ மாமேரு வெற்பும் இடிபட்டவே!
(படைபட்ட = படை பொருந்திய வேலன் பால்
வந்த, வாகைப் பதாகை என்னும் வெற்றிக் கொடியாகிய, தடைபட்ட சேவல் = வேலனால் தடுத்து
ஆட்கொள்ளப்பட்ட சேவல், அதன் சிறகை அடித்துக் கொள்வதால், சலதி என்னும் கடல்
பிரிந்து உடைந்தது; அண்ட கடாகம் உதிர்ந்தது; உடுபடலம் என்னும் நட்சத்திர கூட்டத்தின் அடுக்குகள்
ஒன்றுடன் ஒன்று நெருங்கி மோதிக் கொண்டன; குன்றமும், மாமேரு மலையும் ஒன்றுடன் ஒன்று
இடிபட்டன;
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-12)
No comments:
Post a Comment