கந்தரலங்காரம்-13
ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரனுடை மணிசேர்
திருவரைக் கிண்கிணி ஓசைபடத் திடுக்கிட்ட அரக்கர்
வெருவரத் திக்குச் செவிடுபட்டு எட்டு வெற்பும் கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயங் கெட்டதே!
(ஒருவனாக சிவனின் ஒரு பாகத்தில் இருக்கிற உமா தேவியின் குமாரனாகிய முருகக் கடவுளுடைய,
மணி சேர் திரு அரைக் கிண்கிணி = இரத்தினம்
பொருந்திய இடுப்பில் அணிந்த சதங்கை ஒலியின் ஓசையைக் கேட்டவுடன், அரக்கர்
திடுக்கிட்டு, அஞ்சி நடுங்கினர்; திசைகள் எல்லாம் செவிடுபட்டு, அதனால், எட்டு
மலைகளும், கனகப் பருவரை குன்று என்னும் பொன்னால் ஆகிய குன்றும் அதிர்ந்தன; அதனால்,
தேவர்களின் பயம் நீங்கிற்று!
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-13)
No comments:
Post a Comment