Keats கீட்ஸ்
"Beauty is truth, truth beauty --that is all.
Ye know on earth, and all ye need to know." --(Keats)
'அழகுதான் உண்மை, உண்மை அழகு; இந்த உலகில் இதை நீ அறிவாய், நீங்கள் எல்லோரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்."
--இது மகாகவி கீட்ஸ்-ன் கவிதை வரிகள்.
இந்த வரிகளின் பொருள் இன்னும் சர்ச்சைக்குறியதாகவே
இருந்துவருகிறது.
(Ode on a Grecian Urn - "கிரேக்க ஜாடி பற்றிய கவிதை" என்ற கவிதைத் தொகுப்பில் இந்த வரிகள் உள்ளன.) கவிஞர் கீட்ஸ் எழுதிய வரிகள்; இதை அவர் 1819ல் எழுதினார். அப்போது அந்த இளம் கவிஞன் கீட்ஸ்-க்கு 19 வயதுதான்.
இந்த இளம் கன்றுக் கவிஞன்தான் ஐரோப்பிய கவிஞர்களிலிலேயே முதன்மை கவிஞன். மற்ற கவிகள் இவனுக்கு அடுத்துத்தான் என்று ஆங்கிலேய உலகம் அடித்துச் சொல்கிறது.

உலகில் உள்ள எல்லாக் கவிஞனைப் போலவே இவனும், பிறப்பிலோ,
படிப்பிலோ, பணத்திலோ ஏழ்மையாகவே இருந்திருக்கிறான். இளம் வயதிலேயே தந்தை, தாயை இழந்துவிட்டவன்.
(He had no advantages of birth, wealth or education; he lost his parents in
childhood.) ஒரு சகோதரனை காசநோயில் பறிகொடுத்து விட்டான். மற்றவன் அமெரிக்கா சென்று
விட்டான். வறுமை இவனை விரட்டிக் கொண்டே வந்தது. வறுமையாலேயே, அவன் விரும்பிய ஒரு பெண்ணை
திருமணம் செய்ய முடியாமலேயே போய்விட்டதாம். இவனும் இவனின் தாயைப்போல, சகோரதரனைப் போல,
அதே காசநோயால் 25 வயதில் இந்த உலகை விட்டுவிட்டுச் சென்றவன். இவன் 19 வயதிலிருந்து
25 வயதுவரை எழுதிய கவிதைகள் உலகப் புகழ்பெற்றவைகள்.
"A thing of beauty is a joy forever:
Its loveliness increases;
It will never pass into nothingness."
"My imagination is a monastery and I am its monk."
"Nothing ever becomes real till it is experienced."
இந்தக் கவிஞனின் நோயின் பாதிப்பு அதிகமாகி, லண்டனை விட்டு ரோமுக்கு சென்று அங்கு
மரணத்தை தழுவியவன்.
இவன் இறப்பு உறுதி என்று தெரிந்தபின், தன் நண்பனிடன் "நான் இறந்த பின்,
என் கல்லறையில் என் பெயரையோ, இறந்த தேதியையோ எழுதி வைக்க வேண்டாம்; அதற்குப் பதிலாக
கீழ்கண்ட இந்த வாசகத்தை மட்டும் எழுதிவிடு' என்று கேட்டுக் கொண்டானாம்.
"Here lies One whose Name was written in Water."
"இங்கு ஒருவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்; அவனின் பெயர் தண்ணீரில் எழுதப்பட்டிருக்கிறது."
இறப்புக்குப்பின் புகழின் உச்சிக்கு சென்ற கவிஞன்.
**
"இங்கு ஒருவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்; அவனின் பெயர் தண்ணீரில் எழுதப்பட்டிருக்கிறது."
இறப்புக்குப்பின் புகழின் உச்சிக்கு சென்ற கவிஞன்.
**
No comments:
Post a Comment